
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஃபேமஸான அந்த ப்ளூ கலர் வேகன்-ஆர் காரை யாரோ கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அரவிந்த் கேஜ்ரிவால் காரையே அபேஸ் செய்தது யார்? இதுதான் சமூக வலைத்தளங்களில் இப்போது ஹாட் டாபிக்!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது காரை தலைமைச் செயலகத்தில் வெளியே நிறுத்தியிருந்தார். அவரது காரை மர்ம நபர்கள் நேற்று திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தில்லி முதல்வராகவும் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், தன்னை ஒரு எளிய மனிதர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுபவர். அதற்காக, தான் முன்னர் பயன்படுத்தி வந்த அதே நீல நிற வேகன் ஆர் காரையே இப்போதும் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். வழக்கம்போல் தன் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்றார். ஆனால் அப்போது அவரது கார் அங்கு இல்லை. பூட்டிய காரை யார் நகர்த்திச் சென்றிருப்பார்கள் என்று, அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வரின் காரைத் திருடியவர்கள் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். அவ்வளவு பாதுகாப்பு நிறைந்த தலைமைச் செயலகத்தில், அதுவும் முதலமைச்சரின் காரை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது புதிய செய்தி. இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் நிலையைக் குறித்து டிவிட்டர், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் கடுமையாக கலாய்த்து வருகின்றனர். தன்னைத் தானே எதிர்த்து, தன் ஆட்சியை தானே எதிர்த்து போராட்டங்களை நடத்திப் புகழ்பெற்றவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்று ஒரு விமர்சனம் அவர் மீது முன்வைக்கப்படுகிறது.
அதுபோல், டிவிட்டர் பதிவில் ஓவராக கலாய்த்து சர் ரவீந்திர ஜடேஜாவின் டிவிட்டர் பதிவில்.. அவர் குறிப்பிட்டுள்ளது... கார் கடத்தப்பட்ட போது துரதிர்ஷ்ட வசமாக காரினுள் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லை... ஆமாம்... கடத்தப்பட்ட காரில் மட்டும் அரவிந்த் கேஜ்ரிவாலும் உள்ளே இருந்திருந்தால் ...? என்ன நடந்திருக்கும்? என்பதுதான்!
அந்த டிவிட்டர் பதிவு: