திமுக ஆட்சியில் தமிழகம் எப்படி இருந்தது தெரியுமா? என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?

Asianet News Tamil  
Published : Oct 13, 2017, 03:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
திமுக ஆட்சியில் தமிழகம் எப்படி இருந்தது தெரியுமா? என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?

சுருக்கம்

fishery minister jayakumar criticize dmk

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் மர்மதேசமாக இருந்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நடராஜன் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் சட்டவிதிகள் மீறப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழக அரசை ஸ்டாலின் விமர்சிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் தற்போதைய ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஸ்டாலின் இருப்பதாகவும் அரசின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் தெரிவித்தார்.

இப்போது அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறும் திமுகவின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் மர்மதேசம் போல இருந்தது. அப்போது இருந்த காய்ச்சல் குறித்து சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது, அதை ஒருவித மர்ம காய்ச்சல் என கூறி மூடிமறைத்தனர் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம்.. விடாத அதிகாரிகள்.. சிபிஐ முன் செந்தில் பாலாஜி சொன்ன 'அந்த' ரகசியம்!
ஒரு வேட்பாளர் எத்தனை லட்சம் செலவு செய்யலாம்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ!