
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அப்போது அதிருப்தியிலிருந்த ஓபிஎஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த 12 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 12 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என அந்த 12 எம்.எல்.ஏக்களில் ஒருவரான செம்மலை, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.