
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக அமைச்சர்களை ஆளுக்கு ஆள் கலாய்த்து வருகின்றனர். அதிலும் கூட்டறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சும் செயலும் சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகிவருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றை தெர்மாகோல் மூலம் மூடிய விவகாரம், அதிமுக ஆட்சி அமைக்க சசிகலா பாடுபட்டார் என அவர் கூறியது போன்றவை சமூக வலைத்தளத்தில் வைரலாகின.
இதனையடுத்து, மதுரையில் நேற்று முன்தினம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, டெங்கு பரவாமல் இருக்காமல் வீட்டு வாசலில் சாணம் தெளிக்க வேண்டும் எனக் கூறினார். இந்த கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், தற்போது கிண்டலுக்கு உள்ளாகிவருகிறது.
தமிழக அரசியல்வாதிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைதளமான ட்விட்டரில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். தமிழக அரசுக்கு எதிராக அவ்வப்போது நக்கலும் நைய்யாண்டியுமாக கலாய்ப்பதில் ராமதாசுக்கு நிகர் அவரே தான் அவரது ட்விட்டர் பதிவை புத்தகமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனத் தற்போது பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது எனத் தெரிவித்துள்ள செல்லூர் ராஜுக்கு அறிவியல், மருத்துவத்திற்கான நோபல் பரிசு தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு தொடர்பாக பதிவிட்ட அவர் "ஆர்.கே. நகருக்கு மட்டும் ஒரே ஆண்டில் 3 தீபாவளி கொண்டாட்டங்கள்" என்றும் ஒட்டுமொத்தமாக கலாய்த்துள்ளார்.
மற்றொரு பதிவில், அமைச்சர்கள் வருகைக்காக பசியில் காத்திருந்த மாணவி மயங்கி விழுந்தார்: செய்தி- அதேபோல், அமைச்சர்களையும் பசியுடன் காத்திருக்க வைக்க வேண்டும்! என அமைச்சரை ஆட்டம் காண வைத்துள்ளார்.
பிரதமரை சந்திக்க பன்னீர்செல்வம் டெல்லி பயணம் குறித்து மற்றொரு பதில் "பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு மாநில சுயாட்சி பெற்று தாயகம் திரும்பும் பன்னீர்செல்வத்தை ஒட்டுமொத்த தமிழகமும் போற்ற வேண்டும்!"
"பிரதமரை சந்திக்க பன்னீர்செல்வம் தில்லி பயணம்: செய்தி - அதிமுக உட்கட்சி சிக்கலை தீர்க்க பிரதமர் அலுவலகக் கிளையை சென்னையில் திறக்கலாம்!" ராமதாஸின் இந்த பதிவுகள் ட்விட்டரில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.