முதல்ல வரியை ஒழுங்கா கட்டுங்க….. அது வரைக்கும் பெட்ரோல், டீசல் விலையெல்லாம் குறைக்க முடியாது !! இவருதான் அப்படி அடித்துச் சொல்றாரு ….

Asianet News Tamil  
Published : Jun 19, 2018, 06:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
முதல்ல வரியை ஒழுங்கா கட்டுங்க….. அது வரைக்கும் பெட்ரோல், டீசல் விலையெல்லாம் குறைக்க முடியாது !! இவருதான் அப்படி அடித்துச் சொல்றாரு ….

சுருக்கம்

arun jaitly announce there is no chance to decrese the petrol price

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமை எண்ணெய் நிறுவங்களுக்கே வழங்கப்பட்டன.

இதையடுத்து மோடி தலைமையிலான ஆட்சியில் பெட்ரோல்,டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இதனால் கொஞ்சம், கொஞ்சமாக இதன் விலை உயர்ந்து, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உற்பத்திய வரியைக் மத்திய அரசு குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறை வாய்ப்புள்ளதாக பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வாய்ப்பே இல்லை என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக தங்களது வரிகளை சரியாக செலுத்தினால் பெட்ரோலிய பொருட்களின் மீதான அதிக வரி விதிப்பை சார்ந்திருக்கவேண்டி இருக்காது என தெரிவித்துள்ளார்..

சம்பளதாரர்கள் வரிகளை முறையாக செலுத்தி வரும் நிலையில் மற்றவர்களும் தங்களுடைய வரியை செலுத்துவதில் முன்னேற்றம் காணவேண்டும். எனவே அரசியல் தலைவர்கள், கருத்தாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் எண்ணெய் அல்லாத மற்ற வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்..

பொது மக்கள்  அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை. மாறாக இவற்றின் விலையை குறைத்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்..

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!