பசுமாடு அதை கட்டிப்பிடித்து வணங்குவோம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார் அர்ஜுன் சம்பத்.
பிப்ரவரி 14-ந் தேதி உலக நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பொதுவாக வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் ஆகும்.
சில இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்களில் வன்முறைகளும் நிகழ்வது உண்டு. மத்திய கால்நடைத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவுறுத்தலை விடுத்தது.
இதையும் படிங்க..Kamal : இதுதான் என்னுடைய எதிரி.. அரசியலில் சில சமரசங்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கு- போட்டு உடைத்த கமல்ஹாசன்!
பிப்ரவரி 14 அன்று பசுக்களை கட்டிபிடித்து கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒவ்வொரு பசு நேசரும் இதைச் செய்ய வேண்டும் என வாரியம் தெரிவித்தது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் அப்போது அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வேண்டுகோளை அடுத்து, இந்திய அளவில் பசுக்களை கட்டிப் பிடிக்கும் இந்த விவகாரம் கவனம் பெற்றது. பிறகு எதிர்ப்புகள் கிளம்ப இந்த உத்தரவை வாபஸ் பெற்றது இந்திய விலங்குகள் நல வாரியம். இந்த நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பசுக்களை கட்டிப்பிடித்தே தீருவோம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், பிப்-14 வேலன்டைன் டே ஆபாச கலாச்சார பண்பாட்டு சீரழிவு நிகழ்ச்சிகளுக்கு பதிலாக விலங்குகள் நல வாரியம் அறிவித்த பசு அரவணைப்பு தினம் தற்பொழுது வாபஸ். இந்து மக்கள் கட்சி சார்பில் பசு அரவணைப்பு தினம் கடைபிடிக்கப்படும்! தமிழர்களின் தெய்வம் பசுமாடு அதை கட்டிப்பிடித்து வணங்குவோம்! என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்