வெற்றி போதை தலைக்கேறிடிச்சா.? ADMK தோல்வியை பேசி பேசி சிற்றின்பம் அடையும் உ.பிக்களே.. கொந்தளித்த வேலுமணி.

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2022, 12:18 PM IST
Highlights

எம்ஜிஆர்_Vs_கருணாநிதி என்ற நிலையில் மூன்று சட்டசபை பொதுத்தேர்தலில் அவருடன் மோதி மூன்றிலுமே திரு.கருணாநிதி தோற்றுப்போனார். இதேபோல் அம்மா_Vs_கருணாநிதி என்ற நிலையில் 7 சட்டசபை பொதுத்தேர்தலில் மோதி 4 தேர்தலில் திரு.கருணாநிதி தோற்றுப்போனார். அதேபோல் 2006 -2010 வரையிவான அனைத்து தேர்தலிலும் அதிமுகவிற்கு தொடர் தோல்விதான். 

வெற்றி போதை தலைக்கேறிய நிலையில், அதிமுகவின் தலைமை பற்றியும், அதன் தோல்வியை பற்றி பேசி பேசி  சிற்றின்பம் அடையும் உடன்பிறப்புகள் கடந்த கால திமுகவின் தோல்விகளை மறந்துவிடக்கூடாது என மாஜி அமைச்சர் வேலுமணி வலியுறுத்தியுள்ளார். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெற்ற படுதோல்வியை பலரும் விமர்சித்து வரும் நிலையில் வேலுமணி இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பத்தில் பதிவிட்டுள்ள விவரம் பின்வருமாறு:- 

வெற்றி போதை தலைக்கேறிய நிலையில், அதிமுகவின் தலைமை பற்றியும், அதன் தோல்வியை பற்றி பேசி பேசி  சிற்றின்பம் அடையும் உடன்பிறப்புகளே. உங்களுக்கு இதெல்லாம் நினைவிருக்கிறதா? 2011ல் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்த கட்சிதான் திமுக. அப்போதைய திமுக தலைமை திரு.கருணாநிதிதான், 2011 உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சியிலும் தோல்வியடைந்தீர்களே, 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாமல் போனீர்களே, ஏன் 2016 சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக 2வது முறையும் அதிமுகவிடம் தோற்றீர்களே, கடைசியாக திரு.கருணாநிதி மறையும் வரை  அவர் வகித்த சட்டமன்ற உறுப்பினர் பதவி அதிமுக தயவில் சட்டசபை மசோதா மூலம் காப்பாற்றி கொடுக்கப்பட்டது.

தற்போதைய திரு.ஸ்டாலின் தலைமையிலான திமுகக்கூட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்த கட்சிதான் என்பதை மறக்கவேண்டாம். தோல்விகள்தான் தலைமைப்பண்பு இல்லாமைக்கு தகுதியென்றால் அதிகமுறை திமுகவிற்கு தோல்வியை பெற்றுக்கொடுத்த கருணாநிதிதான் அந்த பட்டியலில்  முதல் இடத்தில் இருப்பார்.எம்ஜிஆர்_Vs_கருணாநிதி என்ற நிலையில் மூன்று சட்டசபை பொதுத்தேர்தலில் அவருடன் மோதி மூன்றிலுமே திரு.கருணாநிதி தோற்றுப்போனார். இதேபோல் அம்மா_Vs_கருணாநிதி என்ற நிலையில் 7 சட்டசபை பொதுத்தேர்தலில் மோதி 4 தேர்தலில் திரு.கருணாநிதி தோற்றுப்போனார்.

அதேபோல் 2006 -2010 வரையிவான அனைத்து தேர்தலிலும் அதிமுகவிற்கு தொடர் தோல்விதான். அதில் தலைக்கனம் ஏறிய மு.க.அழகிரி "அடுத்த தேர்தலில் அதிமுக என்ற கட்சியே இருக்காது" என்று கொக்கரித்தார். ஆனால் நடந்தது என்னவோ அடுத்த ஆண்டே அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்து படுதோல்வியை திமுக சந்தித்ததுதான். தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்ட அதிமுகவை பார்த்து, அதிக தோல்விகளை சந்தித்த திமுக பெரியசாமிகள் 'அதிமுக இனி திமுகவுடன் ஐக்கியமாகி விடும்' என்று சொல்வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!