போலீசாரின் கொலைவெறி தாக்குதலில் உயிர் தப்பிய ஸ்டாலின் நெஞ்சை பதறவைக்கும் உண்மை சம்பவம்

By manimegalai aFirst Published Feb 25, 2022, 11:55 AM IST
Highlights

முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் தனது வாழ்க்கையில் முதல்-அமைச்சர் என்ற அடையாளத்தை பெறுவதற்கு முன்பு என்னெ்ன சாதனைகளை செய்தார்.. எவ்வாறெல்லாம் சறுக்கல்களை சந்தித்தார்... எங்கெல்லாம் வெற்றி பெற்றார்.. எப்படியெல்லாம் தோல்வியை சந்தித்தார் என்பதை நாம் அறிவோம்..

'இவரெல்லாம் முதல்வராக வாய்ப்பே இல்லை..' என்று ஆரூடம் சொன்னவர்களுக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஜாதக கணக்குகளை உடைத்தெறிந்தார் மு க ஸ்டாலின்..

 இதோ 10 மாதங்களை முதல் அமைச்சராக வெற்றிகரமாக நிறைவும் செய்துவிட்டார்...இந்த 10 மாதங்களில் ஸ்டாலின் அவர்களுடைய சிறப்பான ஆட்சித் திறமை தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 
இந்த நிலையில்தான் உங்களில் ஒருவன் என்கிற  தனது சுயசரிதை புத்தகத்தை முதலமைச்சர் எழுதியுள்ளார். அந்த புத்தகம் வருகின்ற 28 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சரி இந்த சுயசரிதையில் அப்படி என்ன இருக்கப் போகிறது ..? ஸ்டாலின் செய்த சாதனைகளும் பெற்ற வெற்றிகளும் தானே! என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் இந்த சரிதையில் 
அவருடைய வெற்றிகளையும் சாதனைகளையும் பற்றி மட்டுமல்ல.. அவருடைய வலிகளையும் தோல்விகளையும் பற்றியும்  எழுதியிருக்கிறார்.

1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முத்துவேல் கருணாநிதி என்ற சகாப்தத்தின் மூன்றாவது மகனாக பிறந்ததில் தொடங்கி, 
1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது வரை என அதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகளை முதல் பாகமாக எழுதியுள்ளார் முக.ஸ்டாலின்.
இதுபோலவே இந்த சரிதையில் சின்ன வயது ஸ்டாலின் செய்ய குறும்புகளையும் சேட்டைகளையும் நீங்கள் படித்து ரசிக்கலாம்.
இளம் வயதில் நாடக நடிப்பு மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்த ஸ்டாலின் அவர்களுடைய முதல் நாடகமான முரசே முழங்கு மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களில் நடித்துள்ள தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளது.
இதேபோல, திரைத்துறையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், தனக்கு திரைத்துறையில் கிடைத்த வாய்ப்பையும் அதில் இருந்து தனக்கு கிடைத்த அனுபவத்தையும் மிக விரிவாகவே பதிவு செய்துள்ளார்.

தி.மு.க முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த 1967 காலகட்டங்களில் பள்ளி மாணவனாக இருந்த ஸ்டாலின், தனது நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு கோபாலபுரம் இளைஞர் தி.மு.க என்ற அமைப்பை ஏற்படுத்தி தலைவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடியதையும், சமூகப்பணி செய்ததையும் பதிவு செய்துள்ளார். இந்த கால கட்டத்தில் தான் 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்காலம் சிறையில் அடைக்கப்பட்ட நினைவுகளையும்  பகிர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மிசா காலத்தில் சிறையில் இருந்தபொழுது நடைபெற்ற பல்வேறு கொடுமைகளை மு.க ஸ்டாலின் அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளில் விவரித்துள்ளார். தன் மீது போலீசாரின் அடிவிழாமல் சிறையில் தன்னுடன் இருந்த சிட்டிபாபு தடுத்ததையும், 
பூட்ஸ் காலால் போலீசார் தாக்கிய போது  அதனை தடுத்தவர் சிட்டிபாபு என்றும், போலிசார் தாக்கியதால்  சிட்டி பாபுவிற்கு  வயிற்றில் ஏற்பட்ட காயம் சீழ் பிடித்து புண்ணாக மாறி பின்னர் சிட்டி பாபு உயிரிழத்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
சிட்டிபாபுதான் தான் உயிர்பிழைக்க காரணம் என்று மிக நேர்மையாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே இந்த சம்பவங்களையும் தன் சுயசரிதையில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்ப்படுகிறது.  அதே போல திருமணமான புதியதில் மிசா சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டதையும், தன்னைக் காண்பதற்காக தன் தந்தை கருணாநிதி சிறைக்கு வந்த போது தன் காயங்கள் கண்டு தந்தை வருந்துவாரே என்பதற்காக முழுக்கை சட்டை அணிந்து தந்தைக்கு தெரியாமல் காயத்தை மறைத்ததை பற்றியும் உணர்ச்சி ததும்ப எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது..

 இந்த புத்தகத்தை வருகிற 28 ஆம் தேதி ராகுல்காந்தி வெளியிடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.இந்த புத்தகத்தில் வெளியில் தெரியாத பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. புத்தகங்களின் வெளியீட்டிற்காக உடன்பிறப்புகள் மட்டும் இல்லாமல் ஏராளமான பொதுமக்களும் காத்துக் கொண்டுள்ளனர். 

click me!