AIADMK: அதிமுகவில் தலைமையே கிடையாது.. கட்சியை வழிநடத்த மட்டும் தான் OPS, EPS.. கொளுத்தி போட்டசெல்லூர் ராஜூ.!

By vinoth kumarFirst Published Feb 25, 2022, 11:31 AM IST
Highlights

ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல்முறையாக தேர்தலில், கூட்டணி இல்லாமல் அதிமுக தனித்து களம் கண்டது. அதிமுகவில் தலைமையே கிடையாது. கட்சியை வழி நடத்த மட்டும், தற்போது இருப்பவர்களை நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தி பேசி முடிவு எடுப்போம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக  வெற்றிக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக  வெற்றிக்கு காரணம். 

ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல்முறையாக தேர்தலில், கூட்டணி இல்லாமல் அதிமுக தனித்து களம் கண்டது. அதிமுகவில் தலைமையே கிடையாது. கட்சியை வழி நடத்த மட்டும், தற்போது இருப்பவர்களை நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தி பேசி முடிவு எடுப்போம். அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. 

வாக்களிக்க வேண்டிய மக்கள் வரவில்லை. பாஜக மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்கிறார். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுகதான் ஆட்சி செய்யும். மாற்றுக்கட்சி என யாரும் ஆள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல் கட்சி நிர்வாகிகளிடையே மீண்டும் வலுப்பெற்று வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!