தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது.? காங்கிரஸ் கட்சியா, பாஜகவா.? அம்பலப்படுத்திய தேர்தல் ஆணையம்..!

By Asianet TamilFirst Published Feb 25, 2022, 9:22 AM IST
Highlights

தேர்தல் முடிந்தாலும் கூட திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி எது என்ற பட்டிமன்றம் ஓயவில்லை. நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக கூறி வரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்து வருவதுடன், காங்கிரஸ் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி என்று பேசி வருகிறார்கள். இதனால், பாஜக - காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

நகர்ப்புற தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி எது என்ற பஞ்சாயத்து பாஜக - காங்கிரஸ் இடையே நடந்து வரும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளையும் மெஜாரிட்டியாக வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதேபோல நகராட்சிகளும், பேரூராட்சிகளும் பெரும்பாலானவை திமுக கூட்டணிகளுக்கே வந்துள்ளன. தேர்தல் முடிந்தாலும் கூட திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி எது என்ற பட்டிமன்றம் ஓயவில்லை. நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக கூறி வரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்து வருவதுடன், காங்கிரஸ் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி என்று பேசி வருகிறார்கள். இதனால், பாஜக - காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தலில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்(வாக்குகள் சதவீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன)


திமுக - 43.59%
அதிமுக - 24%
பாஜக - 7.17%
காங்கிரஸ் - 3.16%
நாம் தமிழர் கட்சி - 2.51%
மக்கள் நீதி மய்யம் - 1.82%
பாட்டாளி மக்கள் கட்சி - 1.42%
அமமுக - 1.38%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1.31%
தேமுதிக - 0.95%
மதிமுக - 0.90%
இந்திய கம்யூனிஸ்ட் - 0.88%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 0.72%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 0.27%
பகுஜன் சமாஜ் கட்சி- 0.24%
ஆம் ஆத்மி கட்சி - 0.07%
இந்திய ஜனநாயகக் கட்சி - 0.06%
சமத்துவ மக்கள் கட்சி - 0.04%
மனிதநேய மக்கள் கட்சி - 0.02%
புதிய தமிழகம் - 0.01%

நகராட்சி வார்டு உறுப்பினர் (வாக்குகள் சதவீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன)

திமுக - 43.49%
அதிமுக - 26.86%
பாஜக -3.31%
காங்கிரஸ் - 3.04%
நாம் தமிழர் கட்சி - 0.74%
மக்கள் நீதி மய்யம் - 0.21%
பாட்டாளி மக்கள் கட்சி - 1.64%
அமமுக - 1.49%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.82%
தேமுதிக - 0.67%
மதிமுக - 0.69%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 0.62%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 0.64%
இந்திய கம்யூனிஸ்ட் - 0.38%
மனிதநேய மக்கள் கட்சி - 0.11%
பகுஜன் சமாஜ் கட்சி- 0.10%
இந்திய ஜனநாயகக் கட்சி - 0.08%
புதிய தமிழகம் - 0.06%
ஆம் ஆத்மி கட்சி - 0.02%
சமத்துவ மக்கள் கட்சி - 0.02%

பேரூராட்சி வார்டு உறுப்பினர் (வாக்குகள் சதவீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன)

திமுக - 41.91%
அதிமுக - 25.56%
பாஜக - 4.30%
காங்கிரஸ் - 3.85%
நாம் தமிழர் கட்சி - 0.80%
மக்கள் நீதி மய்யம் - 0.07%
பாட்டாளி மக்கள் கட்சி - 1.56%
அமமுக - 1.35%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1.34%
தேமுதிக - 0.55%
மதிமுக - 0.36%
இந்திய கம்யூனிஸ்ட் - 0.44%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 0.61%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 0.14%
மனிதநேய மக்கள் கட்சி - 0.14%
பகுஜன் சமாஜ் கட்சி- 0.04%
புதிய தமிழகம் - 0.04%
இந்திய ஜனநாயகக் கட்சி - 0.01%
சமத்துவ மக்கள் கட்சி - 0.01%

click me!