பிடி அரசகுமாரை ஷேம் சைடு கோல் போட வைத்த மாப்பிள்ளை..! திமுகவில் இணைந்ததன் பின்னணி!

Published : Dec 06, 2019, 12:05 PM IST
பிடி அரசகுமாரை ஷேம் சைடு கோல் போட வைத்த மாப்பிள்ளை..! திமுகவில் இணைந்ததன் பின்னணி!

சுருக்கம்

பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த பிடி அரசகுமார் திடீரென திமுகவில் இணைந்தது போல் தோன்றினாலும்அது கிட்டத்தட்ட ஒரு மாதமாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்கிற பாஜக தரப்பு.

கடந்த வாரம் புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பிரமுகர் திருமணவிழாவில் பேசிய அரசகுமார் ஸ்டாலினை ஒட்டு மொத்தமாக புகழ்ந்து தள்ளினார். ஸ்டாலின் தான் தமிழகத்தின் நம்பிக்கை, தான் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் ஸ்டாலின் தான் தலைவர் என்று அவர் பேசியது வழக்கமான மேடை நாகரீகம் போல் தெரியவில்லை. மேலும் ஸ்டாலின் விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று அரசகுமார் கூறியது வழக்கமான ஒன்றாகவும் இல்லை.

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் நிலையில் அந்த கட்சியின் மாநில துணைத் தலைவராக இருக்கும் ஒருவர் எதிர்கட்சி தலைவரை புகழ்ந்து பேசியது அந்த கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் பிடி அரசகுமார் பேசியதை திமுக ஐடி விங்க் வைரலாக்கியது. அனைத்து ஊடகங்களுக்கும் பிடி அரசகுமாரின் பேச்சு உடனடியாக திமுக ஐடி விங்க் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணவிழா முடிந்து அரசகுமார் வெளியே வருவதற்குள் திமுக ஐடி விங்க் அவரது பேச்சை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்ப வைத்திருந்தது. இதற்கு முன்பு சிபி ராதாகிருஷ்ணனும் இதே போல் ஸ்டாலினை புகழ்ந்து பேசியிருந்தார். ஆனால் அப்போது எல்லாம் திமுக ஐடி விங்க் அமைதியாக இருந்தது. ஆனால் தற்போது மட்டும் அரசகுமாரை திமுக ஐடி விங்க் தூக்கிப் பிடிக்க காரணம் என்ன என்று பாஜக தரப்பு சில தகவல்களை வெளியிடுகிறது.

தமிழிசை ஆளுநர் ஆன பிறகு தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கு பிடி அரசகுமாரும் காய் நகர்த்தினார். ஆனால் அவர் பெயரை பாஜக மேலிடம் பரிசீலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் சிலரின் லாபி தான் என்று சொல்லப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் கட்சிக்கு அண்மையில் வந்த நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக்க நடைபெறும் முயற்சி அரசகுமாரை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இதனால் திமுகவில் ஐக்கியமாக அரசகுமார் தூதுவிட்டதாகவும் ஆனால் அவரை வைத்து ஒரு அரசியல் கேம் ஆட முடிவு செய்த மாப்பிள்ளை (திமுகவினர் இவரை இப்படித்தான் அழைப்பார்கள்) போட்ட பிளான் தான் தற்போது பக்காவாக முடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி