சென்னை மாநகரில் பேரணி, போராட்டம் நடத்த உரிய அனுமதி வேண்டும். மீறினால் சட்டநடவடிக்கை.. காவல் ஆணையர் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Feb 6, 2021, 4:09 PM IST
Highlights

ஜல்லிகட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜல்லிகட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கணக்கெடுத்து முறையாக அரசிடம் வழங்கப்படும் 

ஜல்லிகட்டு போராட்டத்தினர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கணக்கெடுத்து அரசிடம் வழங்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் கடந்த ஜனவரி 18 முதல் வரும் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக சென்னை பெசன்ட்நகர், எலியட்ஸ் பீச் சாலை பகுதியில் சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறையினர் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, இரு சக்கர வாகன பேரணி மற்றும் விழிப்புணர்வு பேரணியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் துவக்கி வைத்தார். அதில் கலந்துகொண்டவர்கள் சாலைபாதுகாப்பு உறுதிமொழியும் எடுத்துகொண்டனர்.  

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் பேசுகையில், "இந்த மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றினால் நம் அனைவரும் பாதுகாப்புடன் வாழலாம். சென்னை மாநகரில் பேரணி, போராட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறமால் நடத்தினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

ஜல்லிகட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜல்லிகட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கணக்கெடுத்து முறையாக அரசிடம் வழங்கப்படும்", என்றார். இந்த நிகழ்வில், சென்னை பல்கலை கழக துணைவேந்தர் கௌரி, மண்டல நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்வேல், காவல் ஆணையரின் மனைவியும் சென்னை பல்கலைகழக நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

click me!