தமிழக பாஜகவின் மீனவர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட படகு பேரணியில் பங்கேற்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மீனவர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட படகு பேரணியில் பங்கேற்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்மையில் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்றுத் தருணத்தைக் காணப்போகிறோம். வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இதை அடுத்து தமிழக பாஜகவினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக அலுவலகத்தில் தேசிய கொடிகள் சேகரிக்கப்பட்டு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கனியமூர் பள்ளிக்கூட கலவரத்தில் சாதியின் பெயரால் தலித்துகள் கைது.. திருமாவளவன் கொந்தளிப்பு.
இந்த நிலையில் இன்று நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில மீனவர் அணி சார்பில் பிரம்மாண்டமான படகு பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 250 மீனவ படகுகளுடன் ஆயிரம் மீனவர்கள் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஈசிஆர் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரையில் கடலில் பேரணி சென்றனர். இதில் பாஜக மீனவர் பிரிவு மாநில தலைவர் எம்.சி.முனுசாமி மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டு கடலில் கையில் தேசிய கொடியுடன் படகு பேரணி சென்றார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினின் மருமகனுக்கு கண்டனம்… பாஜகவினர் சாலை மறியல்… திருச்செந்தூரில் பரபரப்பு!!
சுதந்திர தினத்தின் அமுதப் பெருவிழாவைப் பொலிவுடன் கொண்டாடியதால் நீலாங்கரையில் ஆழ் கடலின் நீல வர்ணம் இன்று மூவர்ணம் ஆனது.
மீனவர்கள் தாயாக மதிக்கும் கடல் அன்னை தேசியக் கொடிகளை தன் மடிமீது தாங்கினாள். (1/2) pic.twitter.com/ooVpHTO4VK
இதுக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், சுதந்திர தினத்தின் அமுதப் பெருவிழாவைப் பொலிவுடன் கொண்டாடியதால் நீலாங்கரையில் ஆழ் கடலின் நீல வர்ணம் இன்று மூவர்ணம் ஆனது. மீனவர்கள் தாயாக மதிக்கும் கடல் அன்னை தேசியக் கொடிகளை தன் மடிமீது தாங்கினாள். கையில் தாங்கிய தேசியக்கொடி கம்பீரமாய் பறக்க... வாழிய சுதந்திரம் வாழிய பாரதம் என வாழ்த்து பாடியது நெஞ்சம். தமிழக பாஜகவின் மீனவர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.