8 வழிச்சாலையில் நாடகம்.? மக்களிடம் பகிரங்கமாக சொல்லுங்க... ஸ்டாலினை ரவுண்டு கட்டும் அண்ணாமலை.

By Ezhilarasan Babu  |  First Published Aug 31, 2022, 12:20 PM IST

எட்டுவழிச்சாலைதிட்டத்தில் திமுகவின் நிலைபாடு என்ன என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் வெளிப்படையாக கூற வேண்டும் என பாஜக மாநிலத்த தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 


எட்டுவழிச்சாலைதிட்டத்தில் திமுகவின் நிலைபாடு என்ன என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் வெளிப்படையாக கூற வேண்டும் என பாஜக மாநிலத்த தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

தமிழகத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு வழித்தடம் திட்டத்திற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும். இதன் மூலம் கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட பல நகரங்களில் வளர்ச்சியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் உருவாகும். மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் எந்த திட்டம் என்றாலும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முழு பொறுப்பும் மாநில அரசை சார்ந்தது. 

Tap to resize

Latest Videos

ஆகவே இந்தத் திட்டத்திற்கான முயற்சிகளை மாநில அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்திலே, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சென்னை சேலம் எட்டு வழித் தடம் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இது பாதிக்கிறது என்று கூறி விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டமும் நடத்தியது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டத்தை கொண்டுவர மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஆளும் கட்சியாக வந்த பிறகு, திமுக தன் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுவிட்டது. 

இதையும் படியுங்கள்: தேர்தல வாக்குறுதி கொடுத்தீங்க.. 15 மாசம் ஆயிடுச்சி என்ன பண்ணீங்க..? முதல்வரை விளாசும் ஓபிஎஸ்

அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல உறுதி மொழிகளை கண்டுகொள்ளாமல் விட்டது போல, இதையும் வசதியாக மறந்து விட்டது. தமிழக அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ”துண்டு போட்ட எல்லோரும் விவசாயிகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார். ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவரே, இப்படி பேசுவது விவசாயிகளை அவமதிக்கும் செயல். தமிழக முதல்வர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதற்கான காரணத்தை மக்களிடம் விளக்க வேண்டும்.

போக்குவரத்து மேம்பாடு அடைய, நாடு முழுவதும் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிறிய நகரங்களில் கூட, உடான் திட்டத்தில், சிறிய விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு உதவிகள் செய்யத் தயாராக இருக்கும்போது, பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண்பதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:  மக்களே அலர்ட்!! இனி முக கவசம் அணியாவிட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு வெளியானது..

திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் தங்க நாற்கரச்சாலை திட்டத்தில், தமிழகத்தையும் இணைக்கும் போது, எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல், திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது போல, நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில், தமிழகஅரசின் திட்டமிடும் குழுவில் வெளிப்படைத் தன்மை இல்லாததுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


 

click me!