சிஎஸ்கே வெற்றிக்கான வின்னிங் ரன் அடித்தவர் எங்க பாஜக கட்சி காரியகர்த்தா ஜடேஜா தான்..! அண்ணாமலை அதிரடி

By Ajmal Khan  |  First Published May 30, 2023, 12:38 PM IST

சிஎஸ்கே அணிக்காக வின்னிங் ரன் அடித்தது பாஜக காரியகர்த்தா, ஜடேஜா ஒரு பிஜேபி காரியகர்த்தா.. அவரது மனைவி பாஜக எம்எல்ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


சாம்பியன் பட்டம் வென்ற சென்னை

ஐபிஎல் இறுதி போட்டி நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை சீட் நுனிக்கு அழைத்து சென்றது. ரசிகர்களுக்கு நிமிடங்களுக்கு நிமிடம் மாரடைப்பு ஏற்படும் நிலை தான் நேற்றைய போட்டி அமைந்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவிந்திர ஜடேஜா சிக்ஸ் மற்றும் போர் அடித்து சென்னை அணிக்கு கோப்பையை பெற்று கொடுத்தார். இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.  சென்னை அணியின் வெற்றியையைடுத்து தோனி மற்றும் ஜடேஜாவை வாழ்த்தி அரசியல் பிரபலங்கள் சமூகவலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

வெற்றிக்குப் பிறகு மனைவியை கட்டியணைத்த ஜடேஜா!

பல குஜராத்துகளை நாங்கள் தோற்கடித்துள்ளோம்

தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மஞ்சள் படையினரின் இந்த வரலாற்று வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தல தோனி தலைமையில் ஒவ்வொரு சிஎஸ்கே வீரரும் இந்த மகத்தான வெற்றிக்குப் பங்களித்துள்ளனர். 

Still searching for Words to describe that HISTORICAL WIN for our boys in Yellove...

Every single player contributed to this MASSIVE VICTORY under .

NEVER EVER WILL THERE BE A LEADER LIKE THIS IN THE HISTORY OF CRICKET.

YES ITS HIM Who inspired the TEAM… https://t.co/CurZ4VkkOF pic.twitter.com/OYylZhhAJN

— Dr. T R B Rajaa (@TRBRajaa)

 

உண்மையான தலைவரின் கீழ் இருக்கும் ஒரு அணி, எந்த எதிரியையும் வெல்ல முடியும் என்று விளையாட்டை விரும்புபவர்கள் அனைவரும் நம்பினர். அவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டாலும் குஜராத் தோற்கடிக்கப்படும். கடந்த காலங்களில் பல குஜராத்துகளை நாங்கள் தோற்கடித்துள்ளோம். ஒரு அணியாக எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகிற்குக் காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையை எப்போதும் நம்புவோம் என டிஆர்பி ராஜா பதிவிட்டிருந்தார்.

ஜடேஜா பாஜக காரியகர்த்தா

இந்தநிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில்,   சிஎஸ்கே அணிக்காக வின்னிங் ரன் அடித்தது பாஜக காரியகர்த்தா, ஜடேஜா ஒரு பிஜேபி காரியகர்த்தா.. அவரது மனைவி பாஜக எம்எல்ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர், தமிழனாக பெருமை படுகிறேன். அதே நேரத்தில் சிஎஸ்கே அணியை விட குஜராத் அணியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். 96 ரன் அடித்தது ஒரு தமிழர் அதையும் கொண்டாடுகிறேன்.

சிஎஸ்கே அணியில் ஒரு தமிழர் கூட இல்லை

சிஎஸ்கே அணியில் ஒரு தமிழர் கூட ஆடவில்லை. ஆனாலும் சிஎஸ்கேவை கொண்டாடுகிறோம் ஏன் என்றால் தோனிக்காக, நேற்றைய போட்டியில் கடைசியில் வின்னிங் ரன் அடித்து சென்னை அணியை ஜெயிக்க வைத்தது பாஜக காரியகர்த்தா என்பதில் பெருமை படுகிறோம். அதே தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறும்.  இதனை டிஆர்பி ராஜா புரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

ஷேம் ஷேம்…. இப்படியா பண்ணுவீங்க? ஜெய் ஷாவை விளாசும் நெட்டிசன்கள்!

click me!