அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திகேயன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி அளவில் நிறைவு பெற்றது.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், கோவை மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த போதும் திமுக அமைச்சர்களின் ஊழல் தொடர்பான புகார்களை அடங்கிய கோப்புகளை அளித்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க;- அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் ரெய்டு..! யார் இவர் தெரியுமா?
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு மற்றும் உறவினர்கள் வீடு, ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த 26ம் தேதி சோதனை நடத்தினர். குறிப்பாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திகேயன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இதையும் படிங்க;- சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை.. இதை திசை திருப்பவே ரெய்டு.. ஆர்.எஸ்.பாரதி பகீர் தகவல்.!
இந்நிலையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் 5வது நாளாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரவிந்தன் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்று வந்த சோதனையும் நேற்றி இரவுடன் நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது.