தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச சைக்கிள் திட்டத்தில் அதிக விலை வைத்து டெண்டர் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வருமான வரி சோதனை
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு, அலுவலகம் என் தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் சோதனை இன்னும் தொடர்ந்து கொண்டு வருகிறது. டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது பானம் விற்பனை செய்தது தொடர்பாகவும், மின் வாரியத்தில் டெண்டர் வழங்கியதில் மோசடி நடைபெற்றதாக வந்த தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை திமுக அரசுக்கு செக் வைக்கும் வகையில் நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த சோதனையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உரிய வரி கட்டவில்லையென்றால் வரி செலுத்த தயாராக இருப்பதாக கூறினார்.
A1 சைக்கிள் உரிமையாளர் வீட்டில் ரெய்டு
செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை முடிவதற்குள்ளாக தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்த A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மூலம் சைக்கிள்கள் வாங்கப்படுகின்றன. தமிழக மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக 600 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டு அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சாதகமாக திமுக ஆட்சியில் டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சோதனைக்கு காரணம் என்ன.?
அதி.மு.க ஆட்சியில் கூட, முழு ஒப்பந்தமும் ஒரு ஏலதாரருக்கு வழங்கப்படாமல், எல்1, எல்2 மற்றும் எல்3 என ஆர்டர்கள் பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் அவான் சைக்கிள்கள் மற்றும் ஹீரோ சைக்கிள்களுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டன. இந்த முறை, சுந்தர பரிபூர்ணம் நிறுவனமான அவான் நிறுவனம் முழு ஆர்டரையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சைக்களின் விலை பல மடங்கு உயர்த்தி ஒப்பந்த செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்