நீங்கள் சொன்னதை செய்தாலே பெட்ரோல் டீசல் விலை தானாக குறையும்.. அமைச்சர் PTR விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி.!

By vinoth kumarFirst Published Dec 8, 2022, 10:53 AM IST
Highlights

கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவை கண்ட போதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. சென்னையில் கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடுமையாக விலை சரிந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவை கண்ட போதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. சென்னையில் கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனையாகிறது. இதனை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தார். 

இதையும் படிங்க;- 2024 மக்களவை தேர்தலில் 25 எம்பிக்கள் சீட் உறுதி.. கோவையில் அண்ணாமலை போட்ட அதிரடி சபதம் !

இதுதொடர்பாக பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில்;- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்/ டீசல் விலை அதற்கு இணையாக குறையாமல் இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை கச்சா எண்ணெய் விலையை சார்ந்து இல்லாமல், இங்கு வேரெதும் ‘சக்திகளை’ சார்ந்து இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், நிதியமைச்சர் பிஆர்டி.பழனிவேல் தியாகராஜனுக்கு கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும். 

ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- திமுக கூட்டணி கட்சிகள் போல நாங்கள் அடிமைகள் அல்ல... அண்ணாமலை கடும் விமர்சனம்!!

click me!