இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அண்ணாமலை... தெரிந்தே தவறை செய்ததா பாஜாக..!?

Published : Jan 25, 2022, 01:36 PM IST
இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அண்ணாமலை... தெரிந்தே தவறை செய்ததா பாஜாக..!?

சுருக்கம்

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் நாம் செல்வோம். ஒன்றிய அளவிலும் செல்வோம். லாவண்யா அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம். 

மாணவி லாவண்யா மரணத்திற்கு நியாயம் கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. 

அப்போது அந்த நிகழ்ச்சியை முன்னின்று தொடங்கி வைத்த அண்ணாமலை, ‘’தமிழகத்திற்கு கட்டாய மதமாற்ற தடை சட்டம் வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. லாவண்யாவின் மரணத்தின் மூலம் அது கிடைக்கட்டும். அதே போல லாவண்யாவின் குடும்பத்தை சுற்றி சுற்றி வந்து, இண்டர்வியூ எடுத்து, கொண்டு இருக்கிறார்கள். லாவண்யாவின் குடும்பத்திற்கு முழு பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இந்த கோரிக்கைகள்தான் பாஜகவினுடையது. நமது உண்ணாவிரதம் என்பது இன்னும் முடியவில்லை. இங்கே தொடங்குகிறது. 

 தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் நாம் செல்வோம். ஒன்றிய அளவிலும் செல்வோம். லாவண்யா அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம். அவர் தனிமனுஷி அல்ல’’ என்றார்.

அந்த உண்ணாவிரதப்போராட்டத்தின் பிற்பகுதியில் 17 வயதான மைனர் பெண்ணான லாவண்யாவின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மறைந்த 17 வயது சிறுமியின் புகைப்படங்களை பொதுவெளியில் அச்சிடப்படக்கூடாது என சட்டமே இருக்கிறது. இந்நிலையில், முன்னாள் ஐபி.எஸ் அதிகாரியும், பாஜக மாநிலத் தலைவரும் பங்கேற்ற நிகழ்ச்சியில் லாவண்யாவின் புகைப்படமும் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.  

 

 இதற்கு விளக்கமளித்துள்ள அண்ணாமலை, ‘’18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்பது தான் பாஜகவின் எண்ணம்.

ஆனால், நியாயம் கிடைக்காது என்று தெரிந்த பிறகே லாவண்யாவின் வாக்குமூல வீடியோ,  புகைப்படத்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனே ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். 

 

தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்."ஒரு மரணத்தை வைத்து ஆதாயம் தேடும் அளவுக்கு பாஜக கீழ்த்தரமான கட்சி கிடையாது. ஏழை குழந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும். குழந்தையை தற்கொலைக்கு தூண்டியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார். 


 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!