அண்ணாமலையின் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளவுள்ள பாதயாத்திரைக்கான பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.அந்த வகையில் செப்டம்பர் 4 ஆம் தேதி ஆலங்குளத்தில் அண்ணாமலை பயணத்தை தொடங்கவுள்ளார்.
தேர்தல் களத்தில் அரசியில் கட்சிகள்
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பாஜக வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்கு வைத்து தீவிரம் பணியாற்றி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 25 தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரமாக களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பாஜக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் தமிழக முழுவதும் பாதயாத்திரை அண்ணாமலை கடந்த மாதம் தொடங்கினார்.
அண்ணாமலையின் பாதயாத்திரை
இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி வைத்தார். முதல் கட்ட பாதயாத்திரை ராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று சேர்ந்தது.இந்த பயணத்தின் போது அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து சுமார் 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இரண்டாம் கட்ட பாதயாத்திரை வருகின்ற செப்டம்பர் நான்காம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இதற்கான மாற்றப்பட்ட புதிய பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 4ஆம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தென்காசி போன்ற இடங்களிலும் ஐந்தாம் தேதி கடையநல்லூர் வாசுதேவநல்லூர் கொண்ட இடங்களிலும் செப்டம்பர் 6ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் இடத்திலும் பாதயாத்திரையை அண்ணாமலை மேற்கொள்ள உள்ளார்.
புதிய பட்டியல் வெளியீடு
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு செல்லும் அண்ணாமலை உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, கம்பம், போடிநாயக்கனூர் போன்ற இடங்களில் தனது பாதயாத்திரையை மேற்கொள்ளுகிறார. இதனை தொடர்ந்து செப்டம்பர் 12 முதல் 15ஆம் தேதி வரை பழனி, கொடைக்கானல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் போன்ற பகுதிகளில் தனது நடை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் தேதி காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம் போன்ற இடங்களில் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை தொடர்ந்து வால்பாறை, பொள்ளாச்,சி தொண்டாமுத்தூ,ர் கிணத்துக்கடவு, கோயம்புத்தூ,ர் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் என செப்டம்பர் 28ஆம் தேதி வரை அண்ணாமலை மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை பயணம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்