அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு விடுத்த எடப்பாடி..! என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Sep 1, 2023, 10:41 AM IST

நாடாளுமன்ற தேர்தல் பணிகள், அதிமுக மாநில மாநாடு வெற்றி தொடர்பாக ஆலோசிப்பபதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 


அதிமுகவில் அதிகார மோதல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக மூத்த நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து பல பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. அப்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில்  தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

குஇதனை அடுத்து கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு தற்போது அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 - திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு, 

தேர்தல் ஏற்பாடு -ஆலோசனை

தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் 20.8.2023 அன்று நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டுக் குழுவினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

காவிரி விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது எடியூரப்பாவும், பொம்மையும் தான் - அழகிரி குற்றச்சாட்டு

click me!