2021ல், தீபாவளிக்கு பெட்ரோல் விலை குறைத்தார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரிய பரிசாகும். தேர்தலை முன்னிட்டு இல்லாமல், தேவையறிந்து விலையை குறைந்த பிரதமர் மோடிக்கு பாஜக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நிலவில் சிவசக்தி- பாஜக நன்றி
பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படி, “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் நூற்றாண்டு கனவு இன்று மேடை தோறும் அவரை முழங்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நனவாகியுள்ளது. “சந்திரன் ஒளியில் அவளை கண்டேன்” என்ற பாரதியின் வரிகளுக்கு ஒப்ப “சிவசக்தி” என்று பெயரிட்டது போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரியது. தோல்வி கண்டு துவளாமல், வெற்றியை எப்படி சாதிப்பது என்பதற்கு சந்திராயன்-3 மிகச் சிறந்த உதாரணம்.
பாரில் பாரதத்தின் பெருமையை நிலைநாட்டி, இந்திய அறிவினை எடுத்துக்காட்டி, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைகொள்ள செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் , அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து சாதனை படைக்க செய்த, மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் கோடானகோடி நன்றிகளும், பாராட்டுக்களும்.
எரிவாயு விலை குறைப்பு- நன்றி தீர்மானம்
இரண்டாவதாக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்ததற்கு பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசத்துப் பெண்களை தெய்வமென மதிக்கும் குணக்குன்று, நமது பாரதப் பிரதமர் அவர்கள். அவர்களின் அல்லல் நீக்கி, பெறாத பிள்ளையாய் துணை நிற்பவர் பிரதமர் அவர்கள். விழாக்காலங்களில் விலை மலிவு என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் என்பதை நன்கு அறிந்தவர். 2021ல், தீபாவளிக்கு பெட்ரோல் விலை குறைத்தார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரிய பரிசாகும். தேர்தலை முன்னிட்டு இல்லாமல், தேவையறிந்து , குடும்ப உறுப்பினரை போல, தேசத்து குடும்பங்களுக்கு இன்பத்தை வாரி வழங்கும் பாரத பிரதமர் அவர்களுக்கு அனைத்து தாய்மார்கள் சார்பிலும் நன்றி
அண்ணாமலை நடை பயணம் வெற்றி
3வது தீர்மானமாக திராவிட மாயையிலிருந்து தமிழகத்தை மீட்டு, அதன் புராதானத்தை, கலாச்சார தொன்மையினை மீட்டு.பிரதமர் அவர்களோடு தோள் கொடுத்து உழைக்கும் நமது மாநில தலைவர், அண்ணாமலை “என் மண், என் மக்கள்” யாத்திரையின் முதற்கட்டம், எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக,
ஒளிவு மறைவற்ற தலைவராக, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உன்னதராக இளைஞர்களும், மக்களும் தலைவர் அவர்களை பார்க்கிறார்கள். 2ஆம் கட்ட யாத்திரையானது வருகின்ற செப்டம்பர் 4ந் தேதி தொடங்க உள்ளது. முதற்கட்டத்தை விட இது இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
பச்சோந்தியாக மாறிவிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.. ஓபிஸ் வழக்கில் லெப்ட் ரைட் வாங்கி அலறவிட்ட நீதிபதி.!