சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன. இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம் அப்போதைய காலத்தில் ஒ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1.72 கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்ட நிலையில், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க தென் மாவட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தபட்டாது. இதனை தொடர்ந்து வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு காவல்துறை தாக்கல் செய்ய மனுவை ஏற்று விசாரணைக்கு அனுமதி அளித்தது. ஆனால் வழக்கு மதுரை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் தேனி மாவட்ட நீதிமன்ற உத்தரவு ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து குற்றம்சாட்டபட்ட நபர்களுக்கு எதிராக நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.
சம்மனை எதிர்த்தும் வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரி ஓபிஎஸ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது. சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவல்துறை குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை எனவும் புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளில் இருந்து விடுவித்து 2012ம் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுவிக்க சிவகங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறையும் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆட்சி மாறிய பின்பு ஒரு நிலைப்பாடும், ஆட்சிக்கு முன்பு ஒரு நிலைப்பாடும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்குகளில் ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி பச்சோந்தியாக மாறிவிட்டது. இதற்கு நீதிமன்றம் துணை போவது வேதனையாக உள்ளது.
சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன. இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.