தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு அமெரிக்க சென்றிருந்த நிலையில் தற்போது இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டு செல்கிறார். அங்கு 6 நாட்கள் தங்கியிருக்கும் அவர், லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் சென்ற அண்ணாமலை
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவிற்கு தினந்தோறும் டப் கொடுத்து வரும் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் பாஜகவை வளர்க்கும் விதமாக தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் குற்றம்சாட்டியும் வருகிறார். அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்கட்சி நாங்கள் தான் என கூறி அதிமுகவிற்கு அதிர்ச்சியும் கொடுத்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஆண்டு இலங்கைக்கு 3 நாட்கள் பயணம் செய்த அண்ணாமலை அங்கு இலங்கை தமிழர்களை சந்தித்து உரையாடினார். அப்போது இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு மூலம் செய்ய அழுத்தம் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.
லண்டன் தமிழர்களை சந்திக்கும் அண்ணாமலை
இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற அண்ணாமலை தனது Fellowship படிப்பு காரணங்களுக்காக அப்போது 2 வாரம் அங்கு தங்கியிருந்தார். தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றவர், அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்தித்து பேசினார். இதனையடுத்து தற்போது அண்ணாமலை இன்று அதிகாலை லண்டனுக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அங்கு பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகள் தொடர்பாக தமிழர்களை சந்தித்து பேச இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 9 நாட்கள் பயணமாக லண்டன் சென்றுள்ள அண்ணாமலை வருகிற 29 ஆம் தேதி தமிழகம் திரும்பவுள்ளார்.
இதையும் படியுங்கள்