கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படி அதிமுகவை ஓட ஓட விரட்டினோமோ அதே போன்று வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் எஜமானர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாக முகவர்கள் அல்ல அனைவரும் பாக முதல்வர்கள்
திமுக சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில், பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார் .
அப்போது பேசிய அவர், பாக முகவர்கள் சிந்திய வியர்வை உழைப்புதான் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தது. தேர்தலில் வேர்வை சிந்தி உழைத்த நீங்கள் பாக முகவர்கள் அல்ல அனைவரும் பாக முதல்வர்கள். பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மயிலாடுதுறையில் இன்றே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றிய பாஜக
பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை பாஜக அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து நடத்திக் கொண்டு வருவது சாதனை விளக்க பொதுக் கூட்டம் அல்ல அது ஒன்பது வருட வேதனை பொதுக்கூட்டம் என தெரிவித்தார். மாணவர்களிடம் நீட் தேர்வை புகுத்தி மாணவர்களின் மருத்துவ கனவுகளை சிதைத்தது, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று கூறி ஏமாற்றியது தான் பாஜகவின் சாதனையாக உள்ளன.
ஆளுநருக்கு ஒரு வேலையும் கிடையாது அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் நம்ம சொல்ற இடத்துல கையெழுத்து போட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்று சமாதானத்தை தூக்கி வைத்து பேசுபவராகவும் குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசுபவராகவும் உள்ளதாக விமர்சித்தார்.
மோடி- ஈடிக்கு எல்லாம் திமுக அஞ்சாது
அதிமுகவில் தற்போது நிலைமை உங்களுக்கே தெரியும். எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தீபா டிரைவர் அணி தீபா புருஷன் அணி என்று அதிமுக பிரித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்று இன்று அதிமுகவினர் போராட்டம் செய்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்காக கை செய்ய வேண்டுமென்று கூறும் அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர்கள் மீது பாஜக அரசு சிபிஐ, ஈடி வருமான வரி சோதனை நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சிபிஐ, ஈடி, ஐடி மூலம் திமுகவை பாஜக அச்சுறுத்தப்பார்ப்பதாக தெரிவித்தவர், மோடி- ஈடிக்கு எல்லாம் திமுக அஞ்சாது இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே திமுகவினர் பார்த்தவர்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ED ரைட் ரொம்ப ஜாலியா போகுது - அமைச்சர் உதயநிதி பதில்