அண்ணாமலை.. இனி வேடிக்கை பாரக்க மாட்டேன்.. இடத்தையும் நேரத்தையும் குறி.. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2021, 12:59 PM IST
Highlights

ஆதாரமில்லாமல் அண்ணாமலை போன்றவர்கள் குற்றச்சாட்டுகள் வைப்பதை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன், அவரின் குற்றச்சாட்டிற்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன், அப்படி ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அவர் அதை வெளியிடட்டும், இல்லையென்றால் அவர் கட்டாயம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். 

"அண்ணாமலை.. ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் இல்லை என்றால் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேளுங்கள்"  நீங்கள் சொல்லும் அவதூறையெல்லாம் என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக எச்சரித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்த தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நலிந்து போன ஒரு தனியார் நிறுவனத்தை கையகப்படுத்தியது, அதில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். முக்கிய திமுக புள்ளிக்கு சாதகமாக இந்த நிறுவனத்தில் மூலம் 4000 கோடி முதல் 5 ஆயிரம் கோடி வரை பண முதலீடு செய்ய சதி நடக்கிறது என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் அந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும், அப்படி இல்லை என்றால் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என கெடு விதித்திருந்தார். இதைத்தொடர்பாக தனது  ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அண்ணாமலை, ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

இதையும் படியுங்கள்: அடேய் சீனாகார நீ பண்ண பாவம் சும்மா விடாதுடா.? மீண்டும் கொத்து கொத்தாக பரவுது கொரோனா.. மங்கோலியா மீது பழி.

ஆனால் அதில் எந்தவிதமான ஆதாரங்களோ, ஆவணங்களோ இடம்பெற வில்லை. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், அண்ணாமலையிடம் 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிடுமாறு கேட்டிருந்தோம், இதுவரையில் அவர் எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை. எனவே தான் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை ஏதோ அரசுக்கு எதிராக குற்றம்கூற வேண்டும் என்பதற்காக ஆதாரமில்லாத  அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். ஏதோ ஒரு நிறுவனத்திற்கு சலுகை காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார், அப்படி சலுகை  கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் வெளியிட வேண்டும் என்று நாம் கேட்கிறோம், ஆனால் வாய்க்கு வந்ததை எல்லாம் அவர் யோசிக்க கூடாது, எதையும் ஆதாரத்துடன் பேச வேண்டும். அவரைப்போல வெறுமனே நான் சமூகவலைதளத்தில் மட்டும் பணி செய்பவன் அல்ல, பொதுவாழ்வில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். அண்ணாமலைக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாது, ஏன் இப்படி அவர் அரைவேக்காட்டுத் தனமாக ஆதாரம் இல்லாமல் கண்டபடி பேசி வருகிறார் என்று தெரியவில்லை.

அண்ணாமலை தனியார் மின்சார கொள்முதலில் ஊழல் என்று கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. அண்ணாமலைக்கு தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது. அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமில்லாமல் கண்டபடி உளறி வருகிறார். அவருக்கு மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை இனிமேல் ஆதாரத்துடன் மட்டுமே அரசின் மீது குற்றச்சாட்டுகளை வையுங்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இதையும் படியுங்கள்: இந்தியா சக்தி மிக்க நாடு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி பெருமிதம்.

ஆதாரமில்லாமல் அண்ணாமலை போன்றவர்கள் குற்றச்சாட்டுகள் வைப்பதை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன், அவரின் குற்றச்சாட்டிற்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன், அப்படி ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அவர் அதை வெளியிடட்டும், இல்லை யென்றால் அவர் கட்டாயம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நான் தயார், அவரை போல சமூக வலைதளங்களில் விளையாட தயார், இடத்தையும்  நேரத்தையும் முடிவு செய்துவிட்டு சொன்னால் விவாதிக்கத் தயார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
 

click me!