முதியவரை தாக்கிய வீடியோ க்ளிப்... ட்விட்டர் நிறுவன இந்திய தலைவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

By Thiraviaraj RMFirst Published Oct 22, 2021, 12:45 PM IST
Highlights

இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

காஜியாபாத் 'தாக்குதல்' வீடியோ வழக்கு தொடர்பாக உபி காவல்துறையின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் ட்விட்டர் இந்தியத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஜியாபாத்தில் முதியவர் மீதான தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரபிரதேச காவல்துறையின் மனு மீது இந்திய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை முன்னாள் ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மணீஷ் மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

காஜியாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகும்படி மகேஸ்வரிக்கு அனுப்பிய நோட்டீஸை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து உபி காவல்துறை உச்சநீதிமன்றத்தை நாடியது. ஜூன் 17 அன்று, காசியாபாத் காவல்துறை பெங்களூருவாசி மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. வயதான முஸ்லீம் ஒருவரை தாக்கிய வீடியோ கிளிப் தொடர்பான வழக்கில் ஏழு நாட்களுக்குள் தனது லோனி பார்டர் காவல் நிலையத்தில் தனது அறிக்கையைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 

click me!