மன்னிப்பா அதெல்லாம் கேட்க முடியாது... ஆதாரம் இருக்கு... செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதிலடி..!

Published : Oct 22, 2021, 11:41 AM IST
மன்னிப்பா அதெல்லாம் கேட்க முடியாது... ஆதாரம் இருக்கு... செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதிலடி..!

சுருக்கம்

மின் துறை மீது புகார் அளித்தவர்கள் 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்?

மின்சார வாரியம் குறித்த புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்தித்து கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். போகிற போக்கில் இணையத்தில் ஆதாரமில்லாமல் அண்ணாமலை போன்றோர் குற்றம் சொல்லக்கூடாது. மின் துறை மீது புகார் அளித்தவர்கள் 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் ஆதாரமின்றி அவர்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தால் அதற்கு இனிமேல் பதில் சொல்லப்போவதில்லை. அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என செந்தில் பாலாஜி எச்சரித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ’’அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடுத்தால் அனைத்து ஆதாரங்களையும் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க தயார்’’ எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!