பணமோசடி வழக்கில் கைதான திமுக பிரமுகரின் மருமகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

By vinoth kumarFirst Published Oct 22, 2021, 12:55 PM IST
Highlights

கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.

பண மோசடி வழக்கில் கைதான கோவை தங்கம் மருமகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா. சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.

இதனையடுத்து, அருண்பிரகாஷ் மீது மோசடி சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, அருண் பிரகாஷ் மீது சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், அருண்பிரகாஷ் தன்னிடம் ரூ.1½ கோடி வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது வால்பாறையில் தேயிலை எஸ்டேட்டை விற்று பணத்தை தருவதாக கூறினார். மேலும் 2 காசோலைகளை கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. எனவே பணத்தை தராமல் ஏமாற்றிய அருண்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதையடுத்து, அருண் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணைக்கு பிறகு அருண் பிரகாஷை கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவினாசி கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் அவினாசி நோக்கி அழைத்து சென்றனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவை அரசு  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவரை அங்கு ஜெயில் கைதிகள் சிகிச்சை பெற கூடிய வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

click me!