வீர வசனம் பேசிய ஸ்டாலின்..! மோடியுடன் சந்திப்பில் சேர் நுனியில் உட்கார்ந்தது ஏன்..? அண்ணாமலை கிண்டல்

By Ajmal Khan  |  First Published Aug 19, 2022, 2:49 PM IST

பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும், எந்த ஒரு தகுதியும் கிடையாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


திமுகவிற்கு தகுதி இல்லை

திமுக- பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சுடன் சமரசம் செய்து கொள்வதற்கு மற்றும் கூட்டணி வைப்பதற்கு குடும்ப ஆட்சியில் இருக்கக்கூடாது. ஊழலற்ற அரசு மற்றும் மக்களுக்கு நல்லாட்சி புரிய வேண்டும். இவை மூன்றுமே இல்லாததால் அதற்கு அருகதை இல்லை என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும், எந்த ஒரு தகுதியும் கிடையாது என தெரிவித்தார். டெல்லிக்கு செல்வது குனிந்து கும்பிடுவதற்கோ சமரசம் செய்வதற்கோ செல்லவில்லையென முதலமைச்சர் கூறுகிறார். இவர் மட்டும் டெல்லிக்கு செல்லவில்லை, பல மாநில முதல்வர்கள் டெல்லி செல்கிறார்கள். எந்த முதலமைச்சரும் இப்படி டயலாக் பேசிவிட்டு டெல்லி  சென்றதில்லை என தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுக நிர்வாகி...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு

சேர் நுனுயில் உட்கார்ந்த ஸ்டாலின்

இப்படி டயலாக் பேசிவிட்டு பிரதமரோடு சந்திப்பின் போது சேர் நுனியில் முதலமைச்சர் ஸ்டாலின்உட்கார்ந்து இருந்தார். கொஞ்சம் விட்டால் கிழே விழுந்து விடுவார். அது தான் திராவிட மாடல், பேசுவது ஒன்று அங்கு போனது செய்வது ஒன்று என விமர்சித்தார். இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா என்பதை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இலவசம் கொடுப்பதனால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள் கோபாலபுரம் குடும்பத்தினர் மட்டுமே. கமிஷனால் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே லாபம் என கூறினார். அதேநேரம் வாங்கிய கடனையும் முறையாக செலுத்தவில்லை. ஆட்சிக்கு வந்தபோது ரூ.1 லட்சம் கோடி கடன் பெற்ற நிலையில், தற்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் கேட்டுள்ளனர். எந்த அடிப்படையில் இது முன்னேறிக்கொண்டு இருக்கும் அரசு என்றும், திராவிட மாடல் அரசு என்றும் முதலமைச்சர் கூறுகிறார் என்பது தெரியவில்லை.  

பாஜகவிற்கு அண்ணாமலை தலைவர் இல்லை.? ஆர்.எஸ்.எஸ்காரர் தான் மறைமுகமாக இயக்குகிறார்- டாக்டர் சரவணன் பரபரப்பு தகவல்

இலங்கை போல் தமிழகம்

இலங்கையில் ஒரே குடும்பத்தின் கையில் ஆட்சி சென்று, நிதி நிலைமை திவாலாகி, அவர்கள் அனைவரும் இலங்கையை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் குட்டி இலங்கை போல ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அரசை தாண்டி, தமிழக மக்கள் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருப்பதால் இது தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் இலங்கையில் ஏற்பட்ட நிலை விரைவில் இங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு திட்டம் தீட்டிய சீமான்..! தனித்துப் போட்டி.. பெண்களுக்கான தொகுதி பங்கீடும் அறிவிப்பு

click me!