இது சும்மா ட்ரெய்லர் தாம்மா.. இனிமேதான் மெயின் பிக்சரே இருக்கு.. இபிஎஸ்ஐ அலறவிடும் வைத்தியலிங்கம்.!

Published : Aug 19, 2022, 02:27 PM ISTUpdated : Aug 19, 2022, 02:47 PM IST
இது சும்மா ட்ரெய்லர் தாம்மா.. இனிமேதான் மெயின் பிக்சரே இருக்கு.. இபிஎஸ்ஐ அலறவிடும் வைத்தியலிங்கம்.!

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி வராமல் போனால் போகட்டும், தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தேடி வருகிறார்கள். அதிமுகவை வலுப்படுத்துவதே நோக்கம். இபிஎஸ் -இன் முகம் நேற்று கொடூரமாக இருந்தது. அலுவலகத்தில் எந்த ஆவணங்கள் திருட்டு போயுள்ளது என அவர்கள் தெரிவிக்க வேண்டும் என வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்த நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வர தொடங்கியுள்ளனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த  வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

இதையும் படிங்க;- அழைப்பு விடுத்த ஓபிஎஸ்.. உடனே டிடிவி. தினகரன் கொடுத்த பரபரப்பு பதில் என்ன தெரியுமா?

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-தற்போது சிறிய சிறிய பிரச்சனைகளாலும், எங்களுக்குள் கருத்து வேறுபாட்டாலும் திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது. கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்தியலிங்கம்;- ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். அவர் வெளியிட்ட கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சி அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நேற்றைய தினமே இபிஎஸ் பக்கம் இருந்த வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இப்படி தினமும் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர உள்ளனர். அதை நீங்கள் பார்க்க இருக்கத்தான் போகிறீர்கள் என்றார்.

இதையும் படிங்க;-  இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுக நிர்வாகி...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி வராமல் போனால் போகட்டும், தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தேடி வருகிறார்கள். அதிமுகவை வலுப்படுத்துவதே நோக்கம். இபிஎஸ் -இன் முகம் நேற்று கொடூரமாக இருந்தது. அலுவலகத்தில் எந்த ஆவணங்கள் திருட்டு போயுள்ளது என அவர்கள் தெரிவிக்க வேண்டும் என வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!