நாடாளுமன்றத் தேர்தலுக்கு திட்டம் தீட்டிய சீமான்..! தனித்துப் போட்டி.. பெண்களுக்கான தொகுதி பங்கீடும் அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Aug 19, 2022, 12:57 PM IST
Highlights

நாட்டை முழுவதும் தனியாரிடம் விற்றுவிட்டு மக்கள் கையில் கொடியை மட்டும் கொடுத்து விட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

மாயோன் பெருவிழா- அரசு விழா

 நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாயோன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். முல்லை நிலத்தின் தலைவன் மாயோன் புகழை போற்றும் தினம் இன்று. ஆனால்  ஆரியர் வருகைக்கு பிறகு மாயோன் கண்ணன், கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ண பரமாத்தமாவாக மாறிப் போனார். பண்பாட்டு புரட்சியை மக்களிடம் கொண்டு செல்ல பொருளாதார சுமை பெரும் சுமையாக நாம் தமிழர் கட்சிக்கு இருக்கிறது. அரசு விழாக்களாக இவற்றை மாற்ற வேண்டும் என்றார். இந்து மதம் எங்கள் மேல் திணிக்கப்பட்ட மதம். ஆனால் நாங்கள் சைவர்கள். அதிலும் நாங்கள் வீர சைவர்கள். இந்து மதத்திற்கு வெள்ளை அடிக்கும் வேலையை நாங்கள் செய்யப்போவதில்லை. அரசை ஆல்பவரே நாங்கள் 90% இந்துக்கள் என்கிறார். பிறகு எப்படி பண்பாட்டு மீட்சி நடக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

பாஜகவிற்கு அண்ணாமலை தலைவர் இல்லை.? ஆர்.எஸ்.எஸ்காரர் தான் மறைமுகமாக இயக்குகிறார்- டாக்டர் சரவணன் பரபரப்பு தகவல்

ஆக்கிரமிப்பில் அண்ணா அறிவாலயம்

மின் துறை மட்டுமல்ல எல்லா துறையையும் வித்தாச்சு. நாட்டை விற்றுவிட்டு மக்களுக்கு கொடியை மட்டும் கொடுத்து ஆட்ட சொல்கிறார்கள். அந்த பாலிஸ்டர் கொடியையும் அம்பானி தான் விற்கிறார்.உளவு கப்பலை சீனா நிறுத்த அனுமதித்த இலங்கை மீது ஏன் இந்திய அரசு நடக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய சீமான்,  இன்னும் இந்த அரசுகள் சிங்களர்களை நம்பிக்கொண்டுள்ளனர் என்றார். மேலும் இலவசம் வேண்டாம் என்று சொல்லும் பாஜக ஏன் விவசாயிகளுக்கு ரூ 6000 பணத்தை வங்கிக் கணக்கில் போடுகிறார்கள். அது இலவசம் இல்லையா என கேள்வி எழுப்பினார் 70 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழந்தவனை ஆக்கிரமிப்பு என்று சொல்ல அரசுக்கு வெட்கமா இல்லையா என கூறினார்.  பல நீதிமன்றாங்களே இன்று ஆக்கிரமிப்பில் தான் கட்டப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகமும், சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு இல்லையா என கேள்வி எழுப்பினார்.

சந்தையில் மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை..! மின் தடை ஏற்பட வாய்ப்பு..? அதிர்ச்சி அளிக்கும் ராமதாஸ்

பெண்களுக்கு 50% வாய்ப்பு

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடுகிறோம் என்றும் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றார். ஊழல் லஞ்சத்தை ஒழிக்க தனித்து தான் நிற்க வேண்டும். நாம் தமிழர் வாக்கு விகிதம் 1 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர உழைத்து தான் வந்துள்ளோம் என்றார். நாம் தமிழர் கட்சி எப்போது ஆட்சிக்கு வரும் என்ற கேள்விக்கு நல்ல ஜோஷியக்காரரை  கேட்டு சொல்கிறேன் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

எந்த முதல்வராவது படத்தின் ட்ரைலர் வெளியீட்டுக்கு செல்வாரா..? ஸ்டாலினை கலாய்க்கும் அண்ணாமலை


 

click me!