சமூக நீதி என்று மேடைகளில் வெறும் உதட்டளவில் பேசிக் கொண்டு இருக்காமல், தங்கள் கட்சியினருக்கு முதலில் சமூக நீதி குறித்துக் கற்றுத் தர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை, அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
திமுக- பாஜக மோதல்
பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட மோதலில் பாஜக பட்டியல் பிரிவை சேர்ந்த நிர்வாகியை திமுக கிளைச் செயலாளர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை பாஜக தெற்கு ஒன்றியச் செயலாளர், பட்டியல் பிரிவைச் சேர்ந்த சகோதரர் அன்பரசன், தனது வீட்டில் நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்ததாகக் கூறி, வாளரக்குறிச்சி திமுக கிளைச் செயலாளர் கண்ணன் என்பவரும் அவருடன் இருந்தவர்களும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.
சமூக நீதி கற்றுகொடுங்கள்
சமூக நீதி என்று வேஷமிட்டுத் திரியும் திமுகவின் அமைச்சர் ஒருவரின் சொந்தத் தொகுதியிலேயே, இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது. திமுக கிளைச் செயலாளர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும், தலைமறைவு என்று காரணம் சொல்லிக் கொண்டு இருக்காமல், உடனடியாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சமூக நீதி என்று மேடைகளில் வெறும் உதட்டளவில் பேசிக் கொண்டு இருக்காமல், தங்கள் கட்சியினருக்கு முதலில் சமூக நீதி குறித்துக் கற்றுத் தர வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உண்மையான சமூக நீதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சரை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
எஸ்டிபிஐ தமிழக தலைவர் நெல்லை முபராக் வீட்டிற்குள் புகுந்த என்ஐஏ..! திடீர் சோதனைக்கு காரணம் என்ன.?