ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து பாஜக அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை கொள்ளைகாரன் என விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். இது தொடர்பான வழக்கு சூரத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு வெளியான அடுத்த 24 மணி நேரத்திற்குள் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியனர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் பாஜக அலுவலக முற்றுகை போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். இந்தநிலையில் கன்னியாகுமரியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டது.
திமுக ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது... எடப்பாடி பழனிசாமி விளாசல்!!
பாஜக- காங்கிரஸ் மோதல்
இதனையடுத்து பாஜகவை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் தர்மராஜா அவர்களையும், திருநெல்வேலி முன்னாள் மாவட்டத் தலைவர் திரு மகாராஜன் அவர்களையும், மற்றும் பாஜக தொண்டர்களையும் கைது செய்துள்ள தமிழக காவல்துறையின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.பாஜக அலுவலகத்தைத் தாக்கிய ஜனநாயக விரோதிகளைக் கைது செய்வதை விட்டுவிட்டு,
கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் திரு அவர்களையும், திருநெல்வேலி முன்னாள் மாவட்டத் தலைவர் திரு மகாராஜன் அவர்களையும், மற்றும் பாஜக தொண்டர்களையும் கைது செய்துள்ள அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. (1/3)
— K.Annamalai (@annamalai_k)
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு
அவசர கதியில் பாஜகவினரைக் கைது செய்வது யாரைத் திருப்தி படுத்துவதற்காக? காவல்துறையை ஏவல்துறையாக முழுவதுமாக மாற்றியிருக்கும் திறனற்ற திமுக, நாளொரு கொலை நடந்து மாநிலமெங்கும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்