கோவை குண்டு வெடிப்பை வெளிக்கொண்டு வந்தது நாங்கள் தான்..! பாஜகவிற்கு திமுக நன்றி சொல்ல வேண்டும்- அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Nov 8, 2022, 12:20 PM IST
Highlights

காவல்துறையினர் கையில் உள்ள லத்தி என்பது பூஜை செய்வதற்கா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, காவல்துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும் அப்போது தான் கஞ்சா குடிப்பவர்கள், வழிப்பறியில் ஈடுபடுபவர்களை, பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பை வெளிப்படுத்தியது பாஜக

மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில்  4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மதுரை மாநகர் பாஜக சார்பில் எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24ஆம் தேதியே நான் மனிதவெடி குண்டு தாக்குதல் என்றேன், குண்டுவெடித்து 54மணி நேரம் கழித்து தான் பயங்கரவாத தாக்குதல் என தமிழக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மறைத்தது திமுக தான், பாஜக வெளிப்படுத்தாவிட்டால் சிலிண்டர்  குண்டுவெடிப்பில் இறந்த முபின் குடும்பத்திற்கு அரசு வேலையே திமுக அரசு கொடுத்திருக்கும் என தெரிவித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்பாரதி பாஜகவிற்கு நன்றி சொல்ல வேண்டும், பாஜக தான் வெடிகுண்டு சம்பவத்தை வெளிக்கொண்டுவந்ததாக தெரிவித்தார். 

அன்று தவழ்ந்து முதல்வர் பதவி பெற்று.. சசிகலாவிற்கே துரோகம் செய்தவர் இபிஎஸ்.. சும்மா இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்.!

 மதுவால் இளைஞர்கள் பாதிப்பு

பாஜகவின் புதிய கல்வி கொள்கை தமிழகத்தில் மாற்று பெயர்களில் இல்லம் தேடி கல்வி போன்ற பெயரில் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர் தான் தமிழில் பயின்று வருகின்றதாகவும் கூறினார்.  மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடைபெற்ற சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. பள்ளி குழந்தைகள் பீர் பாட்டில்களை எடுத்துசெல்லும் நிலை தான் தமிழகத்தில் உள்ளதாக குற்றம்சாட்டினார்.  

கட்டுகோப்பாக இருந்த தமிழகம் மதுவாலும், கஞ்சாவால் சீரழிந்துள்ளதாகவும் விமர்சித்தார்.  காவல்துறையின் கையை கட்டிப்போடப்பட்டுள்ளது தமிழகத்தில் வீபரீதத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். காவல்துறையினர் கையில் உள்ள லத்தி என்பது பூஜை செய்வதற்கா என கேள்வி எழுப்பியவர், காவல்துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும் அப்போது தான் கஞ்சா குடிப்பவர்கள், வழிப்பறி , பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும் என கூறினார். 

ஓபிஎஸ் அணிக்கு புதிதாக மாநில நிர்வாகிகள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம்..! யார், யார் தெரியுமா.?


மத்திய அரசு நிதியை பயன்படுத்தவில்லை

சென்னைக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி வந்துள்ளது., இதனை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்துவது தான் அரசின் வேலை,  அமைச்சர்கள், மேயர் மாற்றி மாற்றி பேசுகின்றனர், மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தவில்லை பெரிய அளவிலான மழை பெய்யாத நிலையில் சென்னை தடுமாறியதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு சார்பாக மழை வெள்ளத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்  திருப்புகழ் ஐஎஏஸ் மோடியின் அன்பை பெற்றவர் , மோடியிடம் பாடம் கற்றவர், அவரது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளனர்.  அதனால் சிறப்பாக பணியாற்றுவார் இதனை தமிழக அமைச்சர்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து ஒழப்பாமல் இருந்தால் சரிதான் என அண்ணாமலை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் பின்தங்கியவர்களா..? 10% இட ஒதுக்கீடு மோசடித்தனமாகும்- சீமான் ஆவேசம்

click me!