தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு..! ராமதாஸ் அறிக்கை

By Ajmal Khan  |  First Published Nov 8, 2022, 11:20 AM IST

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்டம் அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. முழு ஆதரவு  அளிக்கும் என தெரிவித்துள்ளார்.


பதவி உயர்வில் இட ஒதுக்கீடு

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் தொடர்பாக  சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக  மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது! தமிழகத்தில் அரசுத்துறை பதவி உயர்வில் வழங்கப்பட்ட ஓபிசி  இட ஒதுக்கீடு செல்லாது  என 02.09.2020 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

Tap to resize

Latest Videos

ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் பின்தங்கியவர்களா..? 10% இட ஒதுக்கீடு மோசடித்தனமாகும்- சீமான் ஆவேசம்

  தமிழக அரசுக்கு முழு ஆதரவு

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சமூகநீதிக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அப்போதே வலியுறுத்தியிருந்தேன்! எனது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதும்,  சமூகநீதி சார்ந்த வழக்குகளில் பாட்டாளி மக்கள் கட்சி  சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார் வல்லுனர் குழுவின் சிறப்பு அழைப்பாளராக  நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவை, நீதிமன்ற ஆய்வுகளை தாங்கும் வகையில் வலிமையாக தயாரித்து  வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. முழு ஆதரவு  அளிக்கும்! என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் அணிக்கு புதிதாக மாநில நிர்வாகிகள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம்..! யார், யார் தெரியுமா.?

click me!