பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே நேற்று சந்திப்பு நடைபெற்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே நேற்று சந்திப்பு நடைபெற்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். இந்த விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கிண்டி ஆளுநர் மாளிகை சென்று அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை மேடையிலும் அரசியலா..? அமைச்சர் பொன்முடியை போட்டு பொளந்த அண்ணாமலை.
இந்த ஆலோசனையில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது என்ன என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருடன் அரசியல் பற்றி பேசவில்லை. அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என சந்தித்தோம். அதுமட்டுமின்றி புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அவரை சந்தித்து பேசினர்.
இதையும் படிங்க: மோடி ஹாப்பியோ ஹாப்பி.. ஸ்டாலின் காட்டிய செம்ம நெருக்கம்... விமானம் ஏறும் போது கொடுத்தாரு பாருங்க ஒரு பரிசு..!!
அரசியல் பேசுவதற்கான சூழல் தற்போது இல்லை. பிரதமருக்கு தமிழகத்தின் அரசியல் களச்சூழல் நன்றாகவே தெரியும். கடந்த முறை பிரதமர் வந்த போது முதல்வர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் விளம்பரம் இடம்பெற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அடுத்து நடக்கும் பல நிகழ்வுகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு மாடலாக இருக்கும். தமிழர்களின் பாரம்பரியம் செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் வெளி கட்டப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒரு அற்புதமான நிகழ்ச்சி அனைவரும் பாராட்டக் கூடியது என்று தெரிவித்தார்.