தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு மெமோ வழங்கி பரபரப்பை கிளப்பியுள்ளது தெலங்கானா மாநில அரசு.
தெலுங்கானா முதல்வராக கே.சந்திரசேகர ராவ் பதவி வகித்து வருகிறார். இவரது மகனும், டி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே அக்கட்சியினரின் குற்றச்சாட்டு. உதாரணமாக கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வெளியில் அதிகம் தலை காட்டியதில்லை.
சந்திரசேகர ராவின் மகனும், டி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவ், கட்சி விவகாரங்களை கவனித்து வந்ததோடு, ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கே.டி.ராமராவை முதல்வராக வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சியின் முக்கிய தலைவர்கள், கே.சந்திரசேகர ராவை வலியுறுத்தி வருகிறார்கள். இதையடுத்து மகனை முதல்வராக்க சந்திரசேகர ராவ், முடிவு செய்துள்ளார். கட்சியில் மட்டுமல்ல, அரசு எந்திரங்களிலும் தலையீடு அதிகமாக இருக்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள்.
மேலும் செய்திகளுக்கு..MiG-21 போர் விமானதிற்கு மூடுவிழா.. அபிநந்தன் முதல் அவனி சதுர்வேதி வரை.. சாதனை படைத்த வரலாறு தெரியுமா?
அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நகராட்சித்துறை அமைச்சராக இருக்கும் கே.டி ராமராவ், கடந்த ஜூலை 24ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். தெலங்கானா பெல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் சம்மந்தப்பட்ட நகராட்சி சார்பில் , அமைச்சர் ராமராவ் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நகராட்சி ஊழியர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவாக கூறப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சில ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கே.டி ராமராவ் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெல்லம்பள்ளி நகராட்சி ஆணையர் நோட்டீஸ் ஒன்றை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதில் பெல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சி அமைச்சர் கே.டி.ஆர்.ராவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாததற்கான காரணம் விளக்க வேண்டும் என்று மூண்டு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !