அரங்கேற்றுகிறது. திமுகவின் இந்த எதேச்சதிகாரப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை திமுக உணர்ந்திருக்க வேண்டும் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
பாஜக மாவட்ட தலைவர் கைது
தமிழகம் முழுவதும் பாஜக கொடியேற்றப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனையடுத்து காவல்துறை அனுமதியில்லாமல் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் கட்சி கொடி ஏற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், கட்சிக் கொடியேற்றியதற்காக, பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் திரு. செல்வராஜ் அவர்கள், திமுக அரசின் தூண்டுதலால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது, தமிழகத்தில் திமுக எத்தனை ஜனநாயக விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு
தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் குற்றச் செயல்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைக் கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் திறனற்ற திமுக, தனது சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைக்க, பாஜகவினரைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றுகிறது. திமுகவின் இந்த எதேச்சதிகாரப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை திமுக உணர்ந்திருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
Governor Ravi : நாடே ராமர் மயமாகி வருகிறது.! இந்தியர் இதயத்தில் ராம நாமமே ஒலிக்கிறது -ஆளுநர் ரவி