எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், எம்ஜிஆருக்கு பதிலாக நடிகர் அரவிந்த சாமியின் புகைப்படத்தை அச்சிட்டு அதிமுகவினர் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்
அதிமுக நிறுவனரும் நடிகருமான எம்ஜிஆருக்கு இன்று 107வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அதிமுக சார்பாக பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவர்களின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் எம்ஜிஆர் புகைப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
undefined
அரவிந்தசாமிக்கு பேனர் வைத்த அதிமுகவினர்
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் பேனர் வைத்தனர். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் எம்ஜிஆர் வேடத்தில் தலைவி என்ற படத்தில் அரவிந்த சாமி நடித்திருந்தார். அந்த புகைப்படத்தை பெரிய அளவில் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இன்று எம்ஜிஆருக்கு பிறந்த நாளா.? அல்லது அரவிந்த சாமிக்கு பிறந்த நாளா என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்