கோவை சிலிண்டர் வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே காரணம்.! வெளிநாட்டு சதி.! மூடி மறைக்கும் திமுக- அண்ணாமலை ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Oct 24, 2022, 7:16 AM IST

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதனை திமுக அரசு மறைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
 


கோவை சிலிண்டர் வெடிப்பு

கோவையில் இன்று காலை காரில் எடுத்து சென்ற  சிலிண்டா் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் வந்த நபர் உயிரிழந்தாா். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது யார்? என்பது குறித்தும்  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்துள்ளது. ஜமேசா முபின் உக்கடம் பகுதியில் பழைய துணி விற்பனை செய்யும் வியாபாரம் செய்துவந்துள்ளார். மேலும் ஜமேசா முபினின் வீட்டில் சில வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

கோவையில் வெடித்தது யாருடைய கார்.? இறந்த மர்ம நபர் யார்..? சதியா..? விபத்தா..? திணறும் போலீஸ்...!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே காரணம்

இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை   "கோவை சிலிண்டர் வெடிப்பு என்பது வெறும் சிலிண்டர் வெடிப்பு அல்ல. இது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு கொண்ட பயங்கரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது என கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து இதை ஒப்புக்கொண்டு தெளிவுபடுத்துவாரா? தமிழ்நாடு அரசு இந்த தகவலை சுமார் 12 மணி நேரமாக மறைத்து வருகிறது. இது தமிழ்நாடு மாநில உளவுத்துறை மற்றும் திமுகவின் தோல்வி இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Coimbatore Cylinder blast is no more a ‘cylinder blast’. It’s a clear cut terror act with ISIS links.
Will come out in the open & accept this?
TN Govt is hiding this info for 12 hours now. Is this not a clear failure of the state intelligence machinery & DMK Govt?

— K.Annamalai (@annamalai_k)

 

 மூடி மறைக்கும் திமுக

குற்றம்சாட்டப்பட்டவர் தாக்குதலுக்கு திட்டமிட்டபோது உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு உள்ளது. இதற்கு வெளிநாட்டில் இருந்து திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு மண்ணில் சில சக்திகள் இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன. இனியாவது இறக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் எதையும் மறைக்காமல் வெளியில் வந்து தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். 

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடிப்பு விவகாரம்... உயிரிழந்தவர் வீட்டில் வெடிமருந்துகள்... டிஜிபி அதிர்ச்சி தகவல்!!
 

click me!