வேதரத்தினத்திற்கு எதிராக பாஜகவில் புதிய பதவியோடு களமிறங்கிய அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி.!பாஜக பிளான் பலிக்குமா.?

Published : Aug 15, 2020, 08:50 AM IST
வேதரத்தினத்திற்கு எதிராக  பாஜகவில் புதிய பதவியோடு களமிறங்கிய  அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி.!பாஜக பிளான் பலிக்குமா.?

சுருக்கம்

சரவண பவன் ஓட்டல் அண்ணாச்சி விவகாரத்தில் சிக்கி பிரபலம் அடைந்த பெண் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை மாவட்ட துணை தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ஜீவஜோதி. கடந்த ஓராண்டுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஜீவஜோதி சத்தமில்லாமல் கட்சி வேலைகளை பார்த்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.  

நாகப்பட்டிணம் மாவட்டம் .வேதாரண்யம் பகுதியில் பாஜகவிற்கு மிகப்பெரிய சக்தியாக இருந்த எஸ்.கே வேதரத்தினம் பாஜகவை கை விட்டு திரும்பவும் திமுகவிற்கு திரும்பியதால் வேதாரண்யம் பாஜக கூடாரம் காலியானது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக நாடறிந்த ஒரு முகத்தை அங்கே களமிறக்க திட்டமிட்ட பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் ஜீவஜோதியைய் களமிறக்கினார்.முதல் கட்டமாக கடந்த வாரத்தில் வேதாரண்யம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பாஜக கொடியை ஏற்றினார் ஜீவஜோதி.வேதரத்தினம் போல் மக்களுக்கு பளிச்சென்று தெரியும் ஒரு முகத்தை களமிறக்க வேண்டும் என்பதற்காக ஜீவஜோதிக்கு மாவட்ட துணைத் தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறது பாஜக.

தஞ்சை மண்ணில் பாஜகவில் கட்சி பொறுப்புக்கு வந்திருக்கும் ஜீவஜோதி அரசியல் சித்துவிளையாட்டுக்களையும் கற்றுகொள்வார்.அவர் பாஜகவில் உயர்ந்த பதவிக்கு வருவார் என்று சொல்லுகிறார்கள் பாஜகவினர்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!