7வது முறையாக செங்கோட்டையில் மூவர்ணக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி.! 74வது சுதந்திர தினவிழாவில் பெருமிதம்.!

By T BalamurukanFirst Published Aug 15, 2020, 8:11 AM IST
Highlights

74வது இந்திய சுதந்திர தின விழா இன்று  நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பலத்த பாதுகாப்புகளுடன் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது.  
 

74வது இந்திய சுதந்திர தின விழா இன்று  நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பலத்த பாதுகாப்புகளுடன் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது.  

டெல்லி செங்கோட்டைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  இதைத்தொடர்ந்து, மூவர்ண தேசியக்கொடியை  ஏற்றினார் பிரதமர் மோடி.  
7-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றும் பிரதமர் மோடி, வழக்கம் போல தலைப்பாகை அணிந்தபடி  சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்பட்டது. 

விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தேசிய மாணவர் படையினர் கலந்து  கொண்டனர்.  விழாவில் பங்கேற்ற மிக மிக முக்கிய பிரமுகர்களும் சமூக இடைவெளி விட்டு  அமர்ந்திருந்தனர்.  விழாவில் கலந்து  கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து  வந்திருந்தனர். கையை சுத்தப்படுத்திக் கொள்ள விழா நடைபெறும் பகுதியில் ஆங்காங்கே கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டு உள்ளது. உடல் வெப்ப பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்தது. 


சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், " சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!" என்று பதிவு செய்துள்ளார்.
 
 

click me!