டாஸ்மாக் கடை சமூக இடைவெளியின்றி திறக்கலாம்..! விநாயகர் சதூர்த்தி சமூக இடைவெளியுடன் நடத்தக்கூடாதா? ஹெச்.ராஜா

Published : Aug 14, 2020, 10:46 PM IST
டாஸ்மாக் கடை  சமூக இடைவெளியின்றி திறக்கலாம்..! விநாயகர் சதூர்த்தி சமூக இடைவெளியுடன் நடத்தக்கூடாதா? ஹெச்.ராஜா

சுருக்கம்

தமிழகத்தில் 6 நாட்கள் சமூக இடைவெளியுடன் விநாயகர்சதுர்த்தி விழா கொண்டாட இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆவேசப்பட்டுள்ளார்.  

தமிழகத்தில் 6 நாட்கள் சமூக இடைவெளியுடன் விநாயகர்சதுர்த்தி விழா கொண்டாட இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆவேசப்பட்டுள்ளார்.

 இதுகுறித்து ஹெச்.ராஜா பேசும் போது..."வாரத்தில் 6 நாட்கள் அரசு மதுக்கடைகள் இயங்க தமிழகத்தில் அனுமதி உள்ளது.மதுக்கடைகளில் தினமும் எந்த சமூக இடைவெளியும் இன்றி மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்குகின்றனர். அதற்கு அரசானது அனுமதி வழங்கி உள்ளது.ஆனால் தமிழகத்தில் ஆண்டுக்கு 6 நாட்கள் சமூக இடைவெளியோடு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த முடிவை தமிழக அரசானது உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மத சுதந்திரத்தில் தலையிடுவது போன்று உள்ளது அரசின் செயல். மத சடங்குகளில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது". எனக் கூறி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி