சிவகங்கையில் சீட்டுக்கட்டாய் சரியும் திமுக..புயலை கிளப்பிய 'மாமாக்கள்' போஸ்டர்.! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.!

By T BalamurukanFirst Published Aug 14, 2020, 9:08 PM IST
Highlights

தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கும் இந்த நேரத்தில் "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ" என்று அலறிபோய் இருக்கிறது திமுக தலைமை.!
 


சிவகங்கை திமுகவில் மாமாக்களுக்கு நன்றி, மணல் கொள்ளையில் அதிமுகவுடன் கூட்டணி இப்படியான போஸ்டர் தீ பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த போஸ்டரால் திமுக மா.செ பெரியகருப்பன் கதிகலங்கி போயிருக்கிறார். இந்த விசயம் திமுக தலைமைக்கு போக..! இதுகுறித்து உண்மை என்ன என்பதை விசாரிக்க திமுக தலைமை தனி டீம் போட்டிருக்கிறதாம். தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கும் இந்த நேரத்தில் "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ" என்று அலறிபோய் இருக்கிறது திமுக தலைமை.!

சிவகங்கை மாவட்டத்தில் திமுக செல்வாக்கு சிட்டுக்கட்டாய் சரிந்து கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் மணல் கொள்ளை என்பது தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் அதன் ஆட்டம் அடங்கியிருக்கிறது.அந்த அளவிற்கு திமுக அமைதியாக இருந்திருக்கிறது. ஆளும் அதிமுக அரசின் அமைச்சர் பாஸ்கரன் குடும்பம் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதியில் மணல் வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. தேவகோட்டை, காரைக்குடி, சாக்கோட்டை, காளையார்கோவில் பகுதியில் மாவட்டச்செயலாளர் செந்தில்நாதன் என பங்கு போட்டு கொஞ்சம்கொஞ்சம் இருந்த மணல்களை எல்லாம் எடுத்து கட்டாந்தரையாக்கி கொண்டிருக்கிறார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இவர்களின் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ பெரியகருப்பன். இவர்தான் திமுகவின் மாவட்டச்செயலாளர்.திமுக கட்சி நிர்வாகிகள் பெரியகருப்பன் மீது பல்வேறு புகார்களை தலைமைக்கு அள்ளிவீசி வந்தார்கள். சமீபகாலமாக திமுக தலைவர் ஸ்டாலின் இவர் மீது அதிருப்தியில் தான் இருந்தார். எந்த நேரத்திலும் மாசெ. மாற்றம் இருக்கும் என்று காத்திருந்தனர் நிர்வாகிகள். திமுக தலைமை சொன்ன போராட்டத்தை தவிர ஒரு எதிர்க்கட்சியாக மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சனையையும் இவர் முன்னெடுக்கவில்லை என்கிற கோபம்  குற்றச்சாட்டு அடிமட்டத் தொண்டன் வரைக்கும் இருக்கிறது. மணல் கொள்ளையில் முழுவதுமாக அதிமுக திமுக கூட்டணி கைகோர்த்துவிட்டார்கள்.இவர்கள் கூட்டணியை திருப்பத்தூரில் மணல் கொள்ளைக்கு துணைபோகும் திமுக மா.செ. பெரியகருப்பன் என்று போஸ்டர் அடித்து ஒட்டியது எல்லாம் தனிக்கதை என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் திமுக வெற்றி பெறும். மீண்டும் அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்பதற்காக சிவகங்கையில் போட்டியிட்ட மேப்பல் சக்தியை திட்டமிட்டே தோற்கடித்தார். இது திமுவினர் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். மேப்பல் சக்தி தோற்றது வெறும் 6300 வாக்குகள் தான். தலைமைக்கழகம் வழங்கி கட்சி பணத்தை மேப்பல் சக்தி போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் செலவு செய்யாமல் தான் போட்டியிட்ட திருப்பத்தூர் தொகுதியில் வாரிஇறைத்தார் பெரியகருப்பன். அந்த நேரத்தில் பெரியகருப்பன் மீதான பாலியல் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி மாவட்டத்தை பரபரக்க  வைத்தது. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாக்குகளை பெற அந்த பணத்தையும் தண்ணியாக செலவு செய்தார் பெரியகருப்பன். வெற்றியும் பெற்றார்.எங்கே அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சி மற்றவர்களை தோற்கடித்து..! கட்சிக்குள் எதிர்ப்பை சம்பாதித்த பெரியகருப்பன் கனவு பலிக்காமல போனது.அந்த நேரத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற வில்லை.
 
பெரியகருப்பன் திட்டப்படியே சிவகங்கை தொகுதியில் மேப்பல் சக்தி தற்போதைய கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரனிடம் தோல்வியடைந்தார்.மானம் காத்த  மானாமதுரை தொகுதி முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக மதுரை முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மகள் சித்திரைச்செல்வியை இறக்குமதி செய்து களமிறக்கினார். அவரும் தோல்வி அடைந்தார். டிடிவி தினகரன் பக்கம் சென்ற எம்எல்ஏக்களில் மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன்கென்னடியும் ஒருவர்.தமிழகம் முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் மானாமதுரை தொகுதியில் தமிழரசி ரவிக்குமார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இலக்கியதாசனை களமிறக்கினார் பெரியகருப்பன்.ஆக மாசெ.பெரியகருப்பன் டார்க்கெட் இந்த மாவட்டத்தில் இரண்டே பேர் தான். ஒன்று மேப்பல் சக்தி இன்னொன்று முன்னாள் அமைச்சர் தமிழரசி.

தா.கிருஷ்ணன் படுகொலைக்கு பிறகு மாவட்டச்செயலாளர் பதவியை கைப்பற்றி பெரியகருப்பன். இன்று வரை தனக்கு எதிராக கிளம்பியவர்களை எல்லாம் தட்டிவிட்டுக்கொண்டே வருகிறார் என்கிறார் குற்றச்சாட்டு பெரியகருப்பன் மீது திமுக தலைமையில் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. திமுக செயல்பாடு செயலற்று போய் இருக்கிறது மாவட்டத்தில்.முக. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பத்தூர் சிவராமன், முருகன் ஆகியோர் இறந்து போனார்கள். இவர்கள் இருவரும் பெரியகருப்பனுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார்கள். 

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காளையார்கோவில் ஒன்றியத்தில் திமுக 7 கவுன்சிலர் அதிமுக8 காங்கிரஸ் 1 சுயேட்ச்சை 2 பாஜக1 ஆக மொத்தம் 19 கவுன்சிலர்கள்.மாசெ.பெரியகருப்பன் நினைத்திருந்தால் காளையார்கோவில் யூனியன் சேர்மன் பதவியை கைப்பற்றியிருக்கலாம். மேப்பல் சக்தியில்லாமல் காளையார்கோவில் யூனியனை கைப்பற்றுவேன் சொன்னவர் அதிமுகவிற்கு தாரைவார்த்துவிட்டார். சக்தியின் குடும்பத்தார் பெரியகருப்பன் மீது இருக்கும் வெறுப்பில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்கள்.ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.அதை அதிமுக சரியாக பயன்படுத்திக்கொண்டது.

 

இந்த நிலையில் கடந்த வாரம் காளையார் கோவிலில் திமுக மாவட்டச்செயலாளரை கண்டித்தும் தலைமையிடம் நீதிகேட்டும் மேப்பல் சக்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கட்சிதொண்டர்கள் பெரியகருப்பன் உருவபொம்மையை எரித்து தலைமைக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதற்காகவே அமைச்சர் பாஸ்கரன் பெரியகருப்பனுக்கு பெரிய உதவி செய்திருக்கிறார். அது தான் டிஎஸ்பி ராஜேஸ், இன்ஸ்பெக்டர் இளவரசு ட்ரான்பர்.காளையார் கோவில் தெற்கு ஒன்றியச்செயலாளர் மார்த்தாண்டம் சாக்கோட்டை கிழக்கு ஒன்றியச்செயலாளர் முத்துராமலிங்கம்.உள்ளிட்டோரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது திமுக தலைமை. 
காளையார்கோவில் வடக்கு ஒன்றியச்செயலாளர் மேப்பல் சக்தி ஏற்கனவே கட்சியில் இருந்துநீக்கம் செய்யப்பட்டார். 

இதனிடையே நாட்டரசன்கோட்டை பகுதியில் மாசெ.பெரியகருப்பன் பற்றி போஸ்டர் கலகலக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த போஸ்டரில்...  "மாமாக்களுக்கு வாழ்த்துக்கள்.! லீலை மன்னன் பெரியகருப்பனுக்கு  மாமா வேலை பார்த்து ஒன்றிய பதவி வாங்கிய அனைத்து மாமாக்களுக்கும் வாழ்த்துக்கள். இப்படிக்கு மாமாக்கள் 1.கென்னடி.2 கிருஷ்ணகுமார்.3 ஆரோக்கியசாமி என பெயர் போட்டு போஸ்டர் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது.அந்த போஸ்டரில் ஜெயராமன் பேரூர் கழகச் செயலாளர் நாட்டரசன்கோட்டை என இருந்தது.இந்த நிலையில்., இந்த போஸ்டருக்கும், எனக்கும் சம்மந்தம் இல்லை.என் பெயரில் யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்திருக்கிறார் ஜெயராமன்.

இதுகுறித்து மேப்பல் சக்தி ஆதரவாளர்கள் பேசும் போது.. மா.செ பெரியகருப்பன் சொந்த ஊர் அரளிக்கோட்டை. அங்கே வார்டு கவுன்சிலர் கூட அவரால் ஜெயிக்க வைக்க முடியவில்லை.இவரது சட்டமன்றத்தொகுதிக்குள் இருக்கும் சிங்கம்புணரி யூனியனைக்கூட இவரால் ஜெயிக்க வைக்கமுடியவில்லை. இப்படி ஒரு மாவட்டச்செயலாளர் மீது திமுக தலைமை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மர்மாக இருக்கிறது.சொல்லப்போனால் மாசெ.பதவியில் இருந்து பெரியகருப்பனை நீக்கம் செய்திருக்க வேண்டும். எங்கே மேப்பல் சக்தி மீண்டும் கட்சிக்குள் வந்து எம்எல்ஏவாகி விடுவாரோ என்கிற பயத்தில் தலைமைக்கு தவறான தகவல்களை கொடுத்திருக்கிறார். நாங்கள் சொல்லுவதெல்லாம் மீண்டும் இரண்டு தரப்பையும் அழைத்து விசாரணை நடந்துங்கள் அப்போது உண்மை நிலவரம் தெரியும்.
அதிமுகவில் இருந்து வந்தவரும், திமுக கொடி கம்பத்தை வெட்டி வீசிய அதிமுக முன்னாள் சேர்மனுக்கு  திமுகவில் ஒன்றியச்செயலாளர் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் பெரியகருப்பன்.கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்த கிருஷ்ணகுமாருக்கு ஒன்றியச்செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார்.ஐபேக் டீம் ஒவ்வொரு தொகுதிக்கும் 3வேட்பாளர்களை தயார் செய்திருக்கிறது.அந்த லிஸ்ட்ல மேப்பல் சக்தி பெயர் இடம் பெற்றிருப்பது தான் பெரியகருப்பனுக்கு இந்த ஆத்திரம் என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.

மாசெ. பெரியகருப்பன் தரப்பில் பேசும்போது.." காளையார்கோவில் யூனியன் திமுக கைப்பற்ற வேண்டியது.அதை அதிமுக கைக்கு போகவைத்தது சக்திதான்.கட்சிக்கு துரோகம் செய்தது சக்தி டீம்.என்கிறார்கள்.

 
 

click me!