நீட் விவகாரத்தில் ஆளுநர் சொந்த கருத்தை திணிக்க கூடாது... இது போன்ற பேச்சை நிறுத்தி கொள்ள வேண்டும்- அன்புமணி

By Ajmal Khan  |  First Published Aug 13, 2023, 3:39 PM IST

காசு இருந்தா மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்  என தெரிவித்த அன்புமணி 7.5% இட ஒதுக்கீடு இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் இருந்திருப்பார்கள் என கூறியுள்ளார். 


காவிரி- தண்ணீர் நிறுத்தம்

சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில்  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு அடாவடிதனம் செய்கிறது இது கண்டிக்கத்தக்கது.

Tap to resize

Latest Videos

காவிரி படுகையில் அணைகளில் நிரம்பி இருக்கிறது, 84% நீர் இருக்கிறது. இங்கு நமக்கு வறட்சி இருக்கிறது இவ்வளவு தண்ணீர் வைத்துக் கொண்டு கொடுக்காத கர்நாடகா அரசு மீது தமிழக அரசு  உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். இப்போதே கர்நாடக தண்ணீரை தராத சூழலை நம்மால் சமாளிக்க முடியவில்லை, மேகதாது அணையை கட்டினால் தண்ணீர் கிடைக்காது என கூறினார். எனவே தமிழக முதல்வர் அனைத்து கட்சியினரை அழைத்துக் கொண்டு டெல்லி செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். 

என்எல்சி - விவசாயிகள் நிலம் பறிப்பு

சமீபத்தில் நடந்த நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது. பள்ளியில் தாக்குதல் நடந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. போதைப் பொருள் அதிகளவில் பள்ளி அருகே விற்க்கப்படுகிறது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். என்.எல்.சி.மூன்றாவது சுரங்கம் அமைக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, சமீபத்தில் கூட நெய்வேலியில் 26 கிராமங்கள் அடங்கிய 12,500 ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பகுதியில் வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக வருகிறது. என்.எல்.சி.நிர்வாகம் மூன்றாவது சுரங்கம் அமைக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. என்.எல்.சி.விவகாரத்தில் பாமக உணர்வு பூர்வமாக போராடி வருகிறது. 65000 ஏக்கர் விளைநிலங்களை தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இதில் 40000 ஏக்கர் நிலங்களை அழித்து விட்டனர். சோறு போடும் புண்ணிய மண் இது,

கர்நாடகாவிற்கு மின்சாரம்

45 ஆண்டுகளில் விவசாய நிலம் 12% குறைந்துள்ளது, கடந்த 50 ஆண்டுகளில் விவசாய நிலம் குறைந்து போயுள்ளதால் எங்கு நமக்கு சோறு கிடைக்க போகுது என கேள்வி எழுப்பினார்.  என்.எல்.சி. தமிழகத்திற்கு 800 மெகாவாட்  மின்சாரம் தருகிறது. அதிகளவில் ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் தான் கொடுக்கிறது. எங்கள் மண்ணை அழித்து அவர்களுக்கு ஏன் மின்சாரம் தர வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தேவைபட்டது அப்போது மின் பற்றாக்குறை இருந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக அமைச்சர் சொல்கிறார். அதனால் என்.எல்.சி.தேவையில்லை.

நீட் தேர்வு - ஆளுநர் கருத்திற்கு எதிர்ப்பு

நீட் மசோதாவிற்கு எதிரான தீர்மானத்தில் கையெழுதிட மாட்டேன் என ஆளுநர் சொல்வது. அவர் சொந்த கருத்தை திணிக்க கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். இது மக்களுடைய விருப்பம். எனக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடிக்காது என ஆளுநர் பிரதிபலிக்க கூடாது. தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேவையில்லை என தெரிவிக்கிறார்கள். ஆளுநர் சொல்லியது ஏற்றுக்கொள்ள முடியாது. காசு இருந்தா மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.7.5% இட ஒதுக்கீடு இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் இருந்திருப்பார்கள்.

எதற்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு நடத்துகிறீர்கள் நீட் மட்டும் நடத்துங்க, அறிவு சார்ந்த கல்வி இல்லை, பயிற்சி சார்ந்த கல்வி இல்லை என்றார்.  நீட் பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் மூட வேண்டும் என ஆளுநர் ஒப்புக் கொள்வாரா? என அன்புமணி கேள்வி எழுப்பினார். நீட் ஏழை பிள்ளைகளுக்கு எதிரானது ஆளுநர் இது போன்ற பேச்சை நிறுத்தி கொள்ள வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார். 

 

click me!