மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் 15 சட்ட மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு மசோதா கண்டிக்கத்தக்கது. தனியார் நிறுவனம் 100 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தால், அந்த பகுதிக்குள் இருக்கும் நீர் நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ளலாம் என சட்டம் சொல்கிறது.
இதையும் படிங்க: பிரியங்கா காந்திக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த காங்கிரஸ் தொண்டர்!
undefined
ஆனால் ஏழை மக்கள் நீர்நிலைகளில் வீடு கட்டினால் ஆக்கிரமிப்பு என அரசு அகற்றுகிறது. ஏழைகளுக்கு ஒரு சட்டம், பணக்கார நிறுவனங்களுக்கு ஒரு சட்டமா? தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. அலுவலகம் புகுந்து விஏஓவை படுகொலை செய்தது கண்டிக்கத்தக்கது, உத்தரப்பிரதேசத்தை போன்று தமிழ்நாடு மாறிவிடக்கூடாது.
இதையும் படிங்க: கல்வித்துறையில் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது… கடந்த அதிமுக ஆட்சி குறித்து அன்பில் மகேஷ் விமர்சனம்!!
மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மணல் குவாரிகளை முதலில் மூடவேண்டும். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துள்ள கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.