
வேபுமனு தாக்கல் செய்ய வேண்டிய படிவத்தை முழுவதுமாக நிரப்பாமல், அறைகுறையாய் நிரப்பியதால் தள்ளுபடி செய்யப்பட்ட தீபா, அதைப்பற்றி கொஞ்சம் வருத்தப்படாமல் “என் அத்தையின் முக சாயலில் நான் இருப்பதாலும், அவருடைய ரத்த வாரிசு என்பதாலும் ஆர்.கே.நகரில் எனக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கு இருக்குது. நான் பிரச்சாரத்துக்கு போய் நின்னாலே போதும் அத்தையை நேர்ல பார்த்த மாதிரி மக்கள் கண்ணீர் விட்டுடுவாங்க. நிச்சயமா எனக்கு வாக்குகளை அள்ளியள்ளி போடுவாங்க.
நான் நின்றால் நிச்சயம் ஜெயிச்சிடுவேன், எம்.எல்.ஏ.வாகி சட்டமன்றம் போயி எடப்பாடி மற்றும் பன்னீரை கேள்வி கேட்டு துளைப்பேன் அப்படிங்கிற பயம் இந்த அரசுக்கு வந்துடுச்சு. அதனாலதான் திட்டமிட்டு என்னோட மனுவை தள்ளுபடி பண்ணிட்டாங்க. இதுக்கு காரணமா அவங்க சொன்னதை நான் ஏத்துக்கமாட்டேன்.” என்று சிரிக்காமல் பேசியுள்ளார்.
அதேபோல் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து பா.ம.க.வின் இளைஞரணி தலைவர் அன்புமணியும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர்...“எடை போடுறப்ப ஒரு தட்டுல பொருளையும், இன்னொரு தட்டுல எடைக் கல்லையும் வைப்பாங்க. கூட்டி குறைச்சு, எடுத்து வெச்சு பிறகு ரெண்டும் சமமானதும் அதை ஓ.கே. பண்ணுவாங்க. ஆர்.கே.நகர்ல நடக்குறதும் இதுதான். இடைத்தேர்தல் அப்படிங்கிற பெயர்ல அங்கே வியாபாரம் நடக்குது. ஓட்டுக்கு ஏற்ற மாதிரி பணம் கொடுப்பாங்க.
போன தடவை இந்த பிரச்னைக்காக தானே தேர்தலை ரத்து பண்ணினாங்க? ஆனா இப்பவும் அதே வேட்பாளர்கள்தான் போட்டியிடுறாங்க. அப்புறம் எப்படிங்க நியாயமான நடத்தையை எதிர்பார்க்க முடியும்?” என்றிருக்கிறார் காட்டமாக.