ஜனாதிபதி, நீதிபதி அரசியல் பேசாததை போல ஆளுநரும் அரசியல் பேசாமல் இருக்க வேண்டும் என தெரிவித்த அன்புமணி ஆளுநர் என்பவர் அவர் சார்ந்த கட்சியையோ கொள்கை முடிவையோ வெளியிடக் கூடாது என கேட்டுக்கொண்டார்.
ஆளுநர் செயல் - தமிழகத்திற்கு பாதிப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாமக சார்பாக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆரூரில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவரிடம், தமிழக ஆளுநர் தமிழக அரசு மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இப்போது இருக்கிறது. ஆளுநர் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
undefined
ஆளுநர் அரசியல் பேச கூடாது
ஆளுநரும் முதலமைச்சரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் தான் தமிழகம் முன்னேற்றம் அடையும். ஆளுநர் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும் நீதிபதிகள் எப்படி இருக்கிறார்களோ ஜனாதிபதி எப்படி இருக்கிறாரோ அது போன்று நடுநிலையாக இருக்க வேண்டும் ஜனாதிபதி நீதிபதி அரசியல் பேசாததை போல ஆளுநரும் அரசியல் பேசாமல் இருக்க வேண்டும். ஆளுநர் என்பவர் அவர் சார்ந்த கட்சியையோ கொள்கை முடிவையோ வெளியிடக் கூடாது. தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் தமிழக முதல்வரும் ஆளுநர் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் தான் தமிழகம் முன்னேற்றம் அடையும் என தெரிவித்தார்.
பாமக சும்மா இருக்காது
முன்னதாக தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, தந்தை பெரியார் மண், இந்த மண்ணில் இருந்து கொண்டு பேசுவது தவறு. பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை, அவர் தான் சமூக நீதியை இந்தியாவில் தொடங்கிவைத்தார். அடித்தள மக்கள் எல்லாம் முன்னுக்கு வர காரணமானவர். பெரியார் பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சியோ இழிவாக பேச கூடாது. பாமக முன்னோடிகள் 3 பேர்கள், அவர்கள் தந்தை பெரியார், அம்பேத்கர். கார்ல் மார்க்ஸ் பற்றி தவறாக பேசினால் சும்மா இருக்க மாட்டோம் என அன்புமணி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட அரவணைக்கும் ஒரே மதம் இந்து மதம்.. வானதி சீனிவாசன்.!