1 நாள் போதாது.. 3 நாள் ஊரடங்கு..! காலை பிடிக்காத குறையாக கதறும் மருத்துவர் அன்புமணி..!

By Manikandan S R SFirst Published Mar 22, 2020, 11:40 AM IST
Highlights

ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு போதாது என்றும் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அன்புமணி இல்லையெனில் சீனாவை விட மோசமான விளைவை நாம் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரையிலும் 300 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இன்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 வரை மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடைகள், உணவகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். 

இதுகுறித்து கூறியிருக்கும் அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் இருந்தபோதும் இத்தாலி, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவை மக்கள் மிகக் கடுமையாக பின்பற்றியதால் தான் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட்டுள்ளதாக கூறிய அவர் மெத்தனமாக இருந்ததாலேயே இத்தாலியில் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கூட்டம் கூடல.. ஆடம்பரம் இல்ல.. எளிய முறையில் விஜயகாந்த் வீட்டில் நடந்த திருமணம்..!

தமிழகத்தில் பொதுமக்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல் சாலையில் நடமாடுவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருப்பதாக அன்புமணி கூறியிருக்கிறார். மேலும் ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு போதாது என்றும் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அவர் இல்லையெனில் சீனாவை விட மோசமான விளைவை நாம் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

click me!